அதிலும் நச்சுப் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. வடநாட்டவர்களின் அடிப்படை உணவான கோதுமையும் ஆட்டுக்கும் மாட்டுக்கும் கொடுக்கப்பட வேண்டியது என்றாலும் அரிசியைப் போல அவ்வளவாக நச்சுப் பொருள் இல்லை... என அண்மைய ஆய்வு ஒன்று நம் வாய்க்கு பூட்டு போடுகிறது.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சில உணவியல் அறிஞர்கள் அண்மையில் 'சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்' (Scientific Reports) எனும் ஒரு அறிவியல் இதழில் ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டிருந்தார்கள்.
அதில்தான் இந்தியாவில் இன்று அதிகளவில் உண்ணப்ப டும் சுமார் 18 வகையான அரிசி வகைகளை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டிருந்தார்கள்.
முடிவில், அரிசியில் இருக்கவேண்டிய மிக முக்கியமான சத்துக்களான கால் சியத்தின் அளவு 45 சதவீதமும், இரும்புச் சத்தின் அளவு 27 சதவீதமும், ஸிங்க் (zinc) என்று சொல்லப்படும் துத்தநாகத்தின் அளவு சுமார் 27 சதவீதமும் குறைவாக இருப்ப தாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அத்தோடு இந்த அரிசிகளில் 16 மடங்கு நச்சுப் பொருட்களும் (arsenic), 4 மடங்கு செவ்வீயம் எனும் குரோமியமும் (chromium இருப்பதாகக் கண்டுபிடித் திருக்கிறார்கள்.
கோதுமையைப் பொறுத்தளவில் அரி சியைப் போலவே • சத்துக்கள் குறைவு தான் என்றாலும் நச்சுப் பொருட்கள் மற்றும் குரோமியப் பொருட்களின் அளவு முன்பைவிட குறை வாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
வெறும் சப்பாத்தியுடன் பச்சை முள்ளங்கியை வைத்து சாப்பிடும் வடநாட்ட வர்களைக் கிண்டல் பண்ணும் நம்மைப் போன்ற தென்னாட்ட வர்களுக்கு சப்பாத்தியைவிட சோறு இவ்வளவு ஆபத்தான விஷயமாக மாறியது குறித்து கவலை ஏற்பட, இதுகுறித் தான ஆர்வலர்களைப் பிடித்து விசாரித்தோம்.
நாட்டில் 1400க்கும் அதிக மான அரிசி வகைகள் இருக்க வெறும் 18 வகையை ஆராய்ந்து முடிவுகளைத் தெரிவிக்கும் இதுபோன்ற ஆய்வுகளை சிலர் நம்ப மறுத்திருப்பது குறித்தும் அவர்களிடம் பேசினோம்.
This story is from the 02-02-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 02-02-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.