ஏனெனில், சமீபத்திய ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் இந்தியப் பங்குச் சந்தையில் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறது.
இந்தமுறை அதானி குழுமம் மட்டுமல்ல; செபி எனப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவர் மாதபிபுரி புச்சும் அவரின் கணவர் தாவல் புச்சும் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறது ஹிண்டன்பர்க் நிறுவனம்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இதனால் ஹிண்டன்பர்க், அதானி, செபி தலைவர் எனப் பிரச்னை பூதாகரமாக சுழன்றுகொண்டிருக்கிறது.
யார் இந்த ஹிண்டன்பர்க்? என்ன விவகாரம்?
அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட ஒரு முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமே ஹிண்டன்பர்க். இவர்கள் தங்களை 'Specialises in forensic financial research' எனக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.
அதாவது தடயவியல் துறை போல நிதித்துறையில் அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ச்சி செய்யும் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் எனப் பறைசாற்றிக் கொள்கின்றனர்.
இதில் குறிப்பாக பங்குச் சந்தை, கடன் மற்றும் நிதி சம்பந்தமான பகுப்பாய்வுகளில் கவனம் செலுத்துகின்றனர்.
இந்நிறுவனத்தை கடந்த 2017ம் ஆண்டில் நாதன் ஆண்டர்சன் என்பவர் தொடங்கினார். இதற்கான பெயர் அவர் வைத்ததுகூட தனிக்கதைதான்.
ஆம், 1937ல் அமெரிக்காவின் நியூஜெர்சி அருகே வெடித்த ஒரு ஏர்ஷிப்பின் பெயரே ஹிண்டன்பர்க். இதில் 35 பேர் உயிரிழந்தனர்.
இது மனிதனால் உருவாக்கப்பட்ட முற்றிலும் தவிர்க்கக்கூடிய ஒரு பேரழிவு என்கிறது இந்நிறுவனம். இதேபோல சந்தையில் மனிதர்களால் உருவாக்கப்படும் பேரழிவுகளை முன்னதாகவே வெளிச்சம் போட்டுக்காட்டும் நோக்கத்துடன் ஹிண்டன்பர்க் எனப் பெயரிட்டோம் என்கிறது அதன் இணையதளம்.
இந்நிறுவனம் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம், 'அதானி குழுமம்: உலகின் 3வது பெரிய பணக்காரர், எப்படி கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்துகிறார்' என்ற தலைப்பில் ஓர் ஆய்வினை வெளியிட்டது.
அதில், அதானி நிறுவனத்தில் பல தசாப்தங்களாக நடந்த கணக்கு மோசடி, பங்குகளைக் கையாளுதல் மற்றும் பண மோசடி ஆகியவற்றின் ஆதாரங்களை எங்களின் இரண்டு ஆண்டு விசாரணையின் மூலம் கண்டுபிடித்துள்ளோம் எனக் குறிப்பிட்டது.
This story is from the 30-08-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 30-08-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்
‘என்னது கெணத்த காணோமா...’ போல சென்னையில் இருந்த 85 சதவீத சதுப்பு நிலங்கள் மாயமாக மறைந்திருப்பதாக வந்த அண்மைய செய்தி தீபாவளி அதிர்ச்சியாக இருந்தது.
அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!
யெஸ். பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோற்றிருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவருக்கு பதில் துணை அதிபர் தேர்தலில் வென்றிருக்கிறார் ஜேடி வான்ஸ். இவர் இந்தியாவின் மருமகன்!
அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்
‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் ஸ்பானிஷ் மொழிப்படம் இது. ஒரு சோலார் பவர் நிறுவனத்தை நடத்தி வருகிறார், வழக்கறிஞரான மேனல். ஒரு கிறிஸ்துமஸ் மாலைப் பொழுதில் உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு, திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மேனலின் மனைவி இறந்துவிடுகிறார்.
கோலம்
‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘கோலம்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் ஐசக் ஜான்.
தேவரா பாகம் ஒன்று
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘தேவரா: பாகம் ஒன்று’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது. இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது.
யோலோ
உலகளவில் 2024ம் வருடத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது, ‘யோலோ’ எனும் மாண்டரின் மொழிப்படம். சீனாவில் முதல் இடம்.
திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்
‘‘‘கவனக் குளிகை கொண்டு அதனாலே ககனமார்க்கந் தனிலே அகனமாய்ச்சென்று தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன்’ - ‘மாயா மச்சிந்திரா’ என்று செல்லமாக அழைக்கப்படும் மச்சேந்திர சித்தர் எழுதிய பாடல் இது. அந்தப் பாடலில் இருந்துதான் இந்த ‘ககன மார்கன் ’ங்கிற பெயர்...’’ எனத் தொடங்கினார் இயக்குநர் மற்றும் எடிட்டர் லியோ ஜான் பால்.
ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்! சொல்கிறார் நவீன் சந்திரா
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இருப்பவர் நவீன் சந்திரா.
இரண்டு நான்கு கேட்டால் கிடைக்கும்!
ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், கோலிவுட் முதல் பாலிவுட் வரை புகழ் பெற்றவர். ஆனால், எளிமையாக, யதார்த்தமாகப் பழகக்கூடியவர். அவருடைய மென்மையான வார்த்தைகள் கடினமான மனிதர்களையும் கரைய வைத்துவிடும்.
மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..
‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அகமும் முகமும் மகிழ்ச்சி கொப்பளிக்க அதில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.