அதிகரிக்கும் செலவால் முடங்குகிறதா எதிர்கால நகரம்...?
Kungumam|6-12-2024
நியோம்... கடந்த ஏழு ஆண்டுகளாக சவுதி அரேபியா நாடு மிகப் பிரம்மாண்டமாக கட்டெழுப்பி வரும் ஓர் எதிர்கால நகரத் திட்டத்தின் பெயர் இது.
பேராச்சி கண்ணன்
அதிகரிக்கும் செலவால் முடங்குகிறதா எதிர்கால நகரம்...?

இதில் பிரம்மாண்டம் என்பது வெறும் சம்பிரதாய வார்த்தைகள் அல்ல. ஏனெனில், அத்தனை ஆச்சரியங்கள் நிறைந்த விஷயங்கள் அதனுள் பொதிந்துள்ளன. இதனால், உலக நாடுகள் அனைத்தும் இந்தத் திட்டத்தை வியந்து பார்த்து வருகின்றன.

ஆனால், தற்போது இந்தத் திட்டத்தின் செலவு அதிகரிப்பால் பணிகளில் தாமதம் ஏற்பட, பெரும் தலைவலியைச் சந்தித்து வருகிறது சவுதி அரேபியா. அத்துடன் சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் இருப்பதால் பல்வேறு சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகிறது.

அதென்ன நியோம் (Neom)? கடந்த 2017ம் ஆண்டு சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், நியோம் என்ற இந்த எதிர்கால நகரத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 'Neom' என்பதிலுள்ள முதல் மூன்று எழுத்துகள் (Neo), 'புதிய' எனும் அர்த்தத்தையும், m என்ற கடைசி எழுத்து இளவரசர் முகமதுவையும் குறிக்கிறது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடு சவுதி அரேபியா. எண்ணெய் ஏற்றுமதியில் முதலிடம் வகிப்பதும் அதுவே.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் பொருளாதாரம் எண்ணெய் வளத்தை மட்டும் சார்ந்திருப்பதைக் குறைக்க நினைத்தார் இளவரசர் முகமது பின் சல்மான்.

அதனால் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துவதற்கும், பொது சேவைத்துறைகளை மேம்படுத்துவதற்கும், அதன்வழி யாக சவுதிக்கு வருமானத்தைப் பெருக்கவும் இந்த எதிர்கால நகரத் திட்டத்தை அவரின் கனவுத் திட்டமாக முன்மொழிந்தார்.

அப்படியாக சவுதி அரேபியாவின் 'விஷன் 2030' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த 'நியோம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி பரவலாக உள்ள பாலைவனப் பகுதிகள் சோலை வனமாக மாற்றப்படுகிறது. பாலைவனப் பகுதிகளில் 500 பில்லியன் டாலர் பொருட்செலவில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 42 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

அப்படியென்றால் எப்படியான திட்டமாக நியோம் உருவாகி வருகிறது என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதற்காக சவுதியின் வடக்கு முனையில் அகாபா வளை குடாவும், செங்கடலும் சந்திக்கும் பகுதியில் உள்ள நிலப்பரப்பை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதன் பரப்பளவு 26 ஆயிரத்து 500 சதுர கிமீ. இது இஸ்ரேல், குவைத் நாடுகளைவிட பெரிய பரப்பளவு ஆகும். அதுமட்டுமல்ல. அல்பேனியா நாட்டின் அளவைக் கொண்டது என்கின்றன தகவல்கள்.

This story is from the 6-12-2024 edition of Kungumam.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the 6-12-2024 edition of Kungumam.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM KUNGUMAMView All
பெஞ்சல் புயல் மர்மம்...அரசை குற்றம் சொல்ல முடியாது!
Kungumam

பெஞ்சல் புயல் மர்மம்...அரசை குற்றம் சொல்ல முடியாது!

ஒரு புயல் முழுமையாக கரையைக் கடந்தபின்பும் கூட தென்மேற்கு \" மற்றும் வடகிழக்குப் பருவங்களில் பெய்யும் மழை அதற்குக் கூடு தல் ஈரப்பதத்தையும் ஆற்றலையும் வழங்கலாம் என்பதை பெஞ்சல் புயல் நமக்கு உணர்த்தியிருக்கிறது.

time-read
2 mins  |
20-12-2024
குடிப்பழக்கமும் மோதிர விரலும்!
Kungumam

குடிப்பழக்கமும் மோதிர விரலும்!

உண்மையில் இப்படி யெல்லாம் ஆய்வு செய்திருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

time-read
1 min  |
13-12-2024
விவாகரத்து அதிகரிச்சிருக்கு...ஆனா, சமூக கட்டமைப்பு அப்படியேதான் இருக்கு!
Kungumam

விவாகரத்து அதிகரிச்சிருக்கு...ஆனா, சமூக கட்டமைப்பு அப்படியேதான் இருக்கு!

சமீபத்தில் நடிகர்கள், இசையமைப்பாளர் நாடறிந்த பிரபலங்களின் விவாகரத்து செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

time-read
3 mins  |
13-12-2024
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை! வழி காட்டுகிறதா ஆஸ்திரேலியா.. ?
Kungumam

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை! வழி காட்டுகிறதா ஆஸ்திரேலியா.. ?

கடந்த வாரம் ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் பொருட்டு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.

time-read
1 min  |
13-12-2024
சூது கவ்வும்க்கு முன்னாடி ஆரம்பிச்சு - சூது கவ்வும்க்கு பிறகு தொடரும் இந்தப் படம்!
Kungumam

சூது கவ்வும்க்கு முன்னாடி ஆரம்பிச்சு - சூது கவ்வும்க்கு பிறகு தொடரும் இந்தப் படம்!

கோலிவுட்டில் இது பார்ட்டுடூ சீசன். அந்த வகையில் விஜய்சேதுபதி வெளியாகி வெற்றியடைந்த ‘சூதுகவ்வும்”.

time-read
3 mins  |
13-12-2024
தாராவி மறுசீரமைப்புத் திட்டம்...ஆதாயத்தில் அதானி குழுமம்... கலக்கத்தில் மக்கள்...
Kungumam

தாராவி மறுசீரமைப்புத் திட்டம்...ஆதாயத்தில் அதானி குழுமம்... கலக்கத்தில் மக்கள்...

சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியது.

time-read
2 mins  |
13-12-2024
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை!
Kungumam

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை!

இது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு :

time-read
1 min  |
13-12-2024
தாத்தா நடிகர், அப்பா ஸ்டண்ட் மேன், அம்மா நடிகை...நான் ட்ரீம் கேர்ள்!
Kungumam

தாத்தா நடிகர், அப்பா ஸ்டண்ட் மேன், அம்மா நடிகை...நான் ட்ரீம் கேர்ள்!

'பொண்ணுங்களோட கற்பனையா மட்டும் தான்டா நிம்மதியா வாழ முடியும். கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது!' 'சூப்பர் மாமா...'

time-read
2 mins  |
13-12-2024
விடுதான் பெண்களுக்கு பெரிய ஆபத்து!
Kungumam

விடுதான் பெண்களுக்கு பெரிய ஆபத்து!

'சராசரியாக உலகளவில் இந்த சுமார் 140 பெண்கள் தினமும் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

time-read
1 min  |
13-12-2024
8 வயது உலக சாம்பியன்!
Kungumam

8 வயது உலக சாம்பியன்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு 'நவம்பர் மாதத்தின் மதிய வேளை. ஹைதராபாத்தில் உள்ள ஓர் அமைதியான, விசாலமான ஹால். அங்கே சதுரங்கப் போட்டி ஆரம்பமானது.ஒரு பக்கம் இந்தியாவின் முன்னணி சதுரங்க ஆட்டக்காரர்களில் ஒருவரான குகேஷ் அமர்ந்திருந்தார்.

time-read
1 min  |
13-12-2024