அந்த ஆலோசனையின் ஒரு பகுதியாக 234 தொகுதிப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்ட னர். அவர்களுடனான சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர் டு ஆ லோசனைக் கூட்டத்தை கடந்த 28-ந் தேதி அறிவாலயத்தில் நடத்தினார் மு.க.ஸ்டாலின்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்திய நடிகர் விஜய், தி.மு.க.தான் என்று எங்களின் அரசியல் எதிரி முழங்கியிருந்தார். அவர் கர்ஜித்ததற்கு மறுநாள் (28-ந் தேதி) தி.மு.க.வின் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்ததால், ஸ்டாலினின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு, ஒட்டுமொத்த உடன்பிறப்புகளிடமும் இருந்தது.
துணை முதல்வரும் இளைஞரணிச் செய லாளருமான உதயநிதி, மேடை ஏறாமல் கீழே அமர்ந்துகொண்டார். கலைஞர் ஆட்சியில் துணை முதல்வர் பொறுப்பை மு.க.ஸ்டாலின் ஏற்றிருந்த சமயத்தில், அறிவாலயத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் மேடை ஏறாமல் கீழே அமர்ந்திருந்தார் ஸ்டாலின். இதனை கவனித்த தல் பொறுப்பாளர்கள் சிலர், தலைவர் பாணியை அப்படியே சின்னவரும் (உதயநிதி) ர் என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர்.
கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் போல இருந்தது இந்த ஆலோசனைக் கூட்டம். கட்சி நிர்வாகிகளையும் பார்வையாளர்களையும் பேச வைத்தார் ஸ்டாலின் அவர்களது பேச்சிலிருந்த முக்கிய விசயங்களை உன்னிப்பாகக் கவனித்தார்.
சுமார் 2 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணிகள், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் உள்ளிட்டவைகள் விவாதிக்கப்பட்டன.
முதலில் மைக் பிடித்த ஆர்.எஸ்.பாரதி, "நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றியை நாம் பெற்றதைப்போல சட்டமன்றத் தேர்தலிலும் பெறவேண்டும். அதற்கு உங்களின் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் ரொம்பவே முக்கியம். முந்தைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தீர்மானங்கள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தினோம்; எதிலெல்லாம் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது என ஆராய்ந்து அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகளை திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். அதேபோல, தலைமையிலிருந்து கொடுக்கப்படும்
உத்தரவுகளின்படி பொதுக்கூட்டங்கள், அரங்கக் கூட்டங்கள், போராட்டங்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் முறைப்படி காலதாமதமின்றி நடக்கிறதா என்பதை நீங்கள்தான் கண்காணிக்க வேண்டும். அது பற்றிய அறிக்கையை தலைமைக்கு அனுப்புவது அவசியம்” என்று அறிவுறுத்தினார்.
This story is from the November 02-05,2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 02-05,2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
எடப்பாடியின் வெளிநாட்டு முதலீடுகள்!
\"எடப்பாடிக்கு புதிதாக சிக்கல்கள் வரும்போல் தெரிகிறதே?\"
கட்டுக்கட்டாகப் பணம்! காங்கிரஸ் சீனியருக்குப் பொறிவைக்கும் பா.ஜ.க.!
ஹலோ தலைவரே, தமிழக அமைச்சர் ஒருவரைப் பற்றி வந்திருக்கும் தகவல் ஆட்சி மேலி டத்தை அதிரவைத்திருக்கிறது.\"
மாணவியிடம் அத்துமீறிய சப்-இன்ஸ்பெக்டர்! -அருப்புக்கோட்டை அவலம்!
அருப்புக்கோட்டை அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ப்ளஸ் 2 மாணவி காணாமல் போனார்.
சேலம் உருக்காலை தேர்தல்! தி.மு.க.வோடு மல்லுக்கட்டிய கம்யூனிஸ்ட்!
சேலம் உருக்காலையில் நடந்த தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் சி.ஐ.டி.யூ. தொழிற்சங் கம், அ.தி.மு.க., பா.ம.க. ஆதரவுடன் களமிறங்கி யதை வைத்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணிக்கு மார்க் சிஸ்ட் கம்யூ. கட்சி தாவப் போவதாக பரபரப்பு கிளம்பி யுள்ளது. சேலத்தின் அடையாள மான சேலம் உருக்காலையில் 591 நிரந்தரத் தொழிலாளர்களும், 1,000 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர்.
கார்ப்பரேட்டுகள் வசமாகும் ஏரி, குளங்கள்! -போராட்டத்தில் விவசாயிகள்!
சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப் பட்டு, அந்தத் திட் டங்களை நிறைவேற்றுவதற்காக விவசாயிகளிடமிருந்து நிலம் எடுப்பதை எளிதாக்கும் வகையில் 'தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்புச் சட்டம்' என்ற சட்டம் கடந்த 2023, ஏப்ரல் 21ஆம் தேதி சட்டசபையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டது. கடந்த ஆகஸ்டில் தமிழக கவர்னரும் ஒப்புதலளித்தார். விவசாயிகள் நலனுக்கு எதிரான இந்த சட்டத்தை கம்யூனிஸ்ட், பா.ம.க. உறுப்பினர்கள் எதிர்த்த நிலையில், திடீரென கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
வக்பு வாரிய ஊழல்! போராட்டத்தில் இஸ்லாமியர்கள்!
ஒன்றிய அரசு பாராளுமன்றத் தில் தாக்கல் செய்த வக்பு வாரியத் திருத்தச் சட்டத்தை எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்க்கும் நிலையில், தமிழகத்தில் வக்பு வாரியத்தில் ஊழல் அதிகமாக நடப்பதாக பகீர் புகார்கள் கிளம்பியிருக்கிறது.
என்.ஆர்.ஐ.சான்றிதழ் மோசடி! சிக்கும் மருத்துவ மாணவர்கள்!
இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான என்.ஆர்.ஐ. கோட்டாவில் மோசடி நடப்பது புதுச்சேரி மாநிலத்தில் கண்டறியப்பட்டு 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது புகார் தரப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதுபோல் மோசடி நடந்திருக்குமென்பதால், இதனை சி.பி.ஐ. தீவிரமாக விசாரிக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
வி.சி.க.வை உடைக்கும் விஜய்-ஆதவ் கூட்டணி! அதிரடி காட்டிய திருமா!
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய்யும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அர்ஜுன் ரெட்டியும் போட்டி போட்டுக்கொண்டு தி.மு.க.வை தாக்கிய சம்பவம் தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அந்த அதிர்வுகள் இன்னும் அடங்கவில்லை.
போதைப் பொருள் கடத்தல் நெட்வொர்க்கில் காக்கிகள்! அதிரவைக்கும் உண்மை!
தமிழகத்தில் புழக்கத்திலி ருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளைக் கட்டுப்படுத்துவது தமிழக அரசிற்கு பெரும் சவாலான முயற்சியாக உள்ளது.
எடப்பாடியை நெரிக்கும் கொடநாடு!
'கொடநாடு வழக்கில் எனக்கும் அந்தக் கொலை கொள்ளைக்கும் சம்மந்தமில்லை.