பகல் நேரத்தில் தெருக்களில் முதியவர்கள் மற்றும் சிறார்கள் நடமாட்டம் மட்டுமே இருந்தது. புதியவர்கள் எவரேனும் கிராமத்திற்கு வரும்போது 'யார்? எந்த ஊர்? யாரைப் பார்க்க வேண்டும்?' என்ற கேள்விகளைத்தான் முதலில் எதிர்கொள்ள வேண்டும்.
தொழில் ரீதியாக வரும் சிலர் ஒவ்வொரு கிராம மக்களுக்கும் அறிமுகமானவர்களாக, நெருங்கிப் பழகுபவர்களாக இருந்தனர். அத்தகைய சிலருள் பகல் நேரத்தில் பாத்திரங்களுக்கு முலாம் பூசுபவர், மாலை வேளையில் வரும் கோழி வியாபாரி, நள்ளிரவு நேரத்தில் குறிசொல்லும் கோடங்கி ஆகிய மூவரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
அண்மைக் காலம் வரை கிராமங்களில் பித்தளை, வெண்கல பாத்திரங்கள் மட்டுமே அதிகம் மக்கள் பயன்பாட்டில் இருந்தது. இவ்வகைப் பாத்திரங்களின் பாதுகாப்புக்காக உட்பகுதியில் ஈய முலாம் பூச வேண்டும். தொடர்ந்து பயன்படுத்துவதால் முலாம் பூச்சின் தன்மை மாறும்போது தண்ணீர் மற்றும் சமையலின் தரமும் மாறும். அதனால் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை முலாம் பூசுவது வழக்கமாக இருந்தது. இதற்காகவும் இதர பாத்திரங்களின் பழுதுகளை சரி செய்யவும் இத்தொழில் செய்வோர் ஒவ்வொரு கிராமத்திற்கும் வந்து செல்வார்கள்.
ஈயம் பூசும் தொழிலாளர்கள் பெரும்பாலும் மனைவி மற்றும் குழந்தைகளுடனே வருவார்கள். கிராமத்தின் பொதுவான ஒரு இடத்தில் அதற்கான பட்டறையை அமைத்துவிட்டு தெருக்களில் கூவியவாறே செல்வார்.
This story is from the November 15, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 15, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சேறு வீச்சு சம்பவம்: அரசியலாக்க விரும்பவில்லை
விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டில் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தச் சென்றபோது, அமைச்சர் க.பொன்முடி மீது சேறு வீசப்பட்டது.
விடைபெற்றது ‘ஃபென்ஜால்’!
தமிழகத்தில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்திய ஃபென்ஜால் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அரபிக் கடலை அடைந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபென்ஜால் புயல்: கர்நாடகத்தில் கனமழை
ஃபென்ஜால் புயல் காரணமாக, கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்தது.
திருவண்ணாமலையில் மண் சரிவு: மேலும் இருவரின் உடல்கள் மீட்பு
திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கிய மேலும் இருவரின் உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன. இந்த சம்பவத்தில் உயிரிழந்த 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
கடலூரில் வெள்ளத்தால் பாதித்த 1,800 பேருக்கு நிவாரணப் பொருள்கள்
உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
நவம்பரில் அதிகரித்த இந்திய மின் நுகர்வு
இந்தியாவின் மின் நுகர்வு கடந்த நவம்பர் மாதத்தில் 5.14 சதவீதம் உயர்ந்துள்ளது.
முக்கிய கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடை
கேலியம், ஜர்மானியம், ஆன்டமோனி உள்ளிட்ட மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடை வித்தது.
பஜாஜ் விற்பனை 5% அதிகரிப்பு
இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை நவம்பர் மாதத்தில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மேலும் முன்னேற்றம்
சிரியாவில் அதிர்ஷ்ட தாக்குதல் நடத்திய நாட்டின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவைக் கைப்பற்றியுள்ள கிளர்ச்சிப் படையினர், மற்றொரு முக்கிய நகரான ஹமாவையும் நெருங்கி வருகின்றனர்.
டிசம்பரில் பெண்களுக்கான 'லிவா மிஸ் திவா 2024' போட்டிகள்
பெண்களின் பிரத்யேக ஃபேஷன் திறமைகளை வெளிப்படுத்தும் லிவா மிஸ் திவா போட்டியின் 2024-ஆம் ஆண்டுக்கான பதிப்பு இந்த மாதம் நடைபெறவுள்ளது.