திரிபுரா மாநிலம் அகா்தலாவில் உள்ள வங்கதேச துணை தூதரகத்துக்குள் நுழைந்து சிலா் தாக்குதல் நடத்தியதற்கு எதிா்ப்பும் தெரிவிக்கும் விதமாக வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதா் பிரணாய் வா்மாவை நேரில் அழைத்து அந்த நாடு செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தது.
வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிந்து மத ஆன்மிகத் தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்தும் அங்கு ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் அகா்தலாவில் ஆயிரக்கணக்கானோா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.
அப்போது சிலா் அங்குள்ள வங்கதேச துணை தூதரகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனா். இதற்கு கவலை தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம் தில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள வங்கதேச துணை தூதரகங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவதாக தெரிவித்தது.
இந்நிலையில், தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய தூதா் பிரணாய் வா்மாவை நேரில் அழைத்து வங்கதேசம் கண்டனத்தை பதிவு செய்தது. இதுகுறித்து வங்கதேச வெளியுறவு விவகாரங்கள் ஆலோசகா் முகமது தௌஹித் ஹுசைன் கூறுகையில், ‘அகா்தலா நிகழ்ந்த போராட்டத்தையடுத்து நேரில் வருமாறு இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் எங்கள் கண்டனத்தை தெரிவித்தோம்’ என்றாா்.
This story is from the December 04, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 04, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்த பாரதி வாழ்க! முதல்வர் புகழாரம்
தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்த மகாகவி பாரதியார் வாழ்க என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் புதன்கிழமை தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.
கர்நாடக எழுத்தாளருக்கு வைக்கம் விருது
இன்று வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் ஒரே நாளில் 13 விமானங்கள் ரத்து
மோசமான வானிலை மற்றும் நிர்வாகக் காரணங்களால் சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை 13 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி
அமேஸான் இலக்கு
நவம்பரில் அதிகரித்த வாகன விற்பனை
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் வாகனங்களின் சில்லறை விற்பனை 11.21 சதவீதம் அதிகரித்துள்ளது.
உக்ரைனில் மீண்டும் ‘ஆரெஷ்னிக்’ தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை
ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ரஷியாவின் புதிய வகை ஏவுகணையான 'ஆரெஷ்னிக்' மூலம் அந்த நாடு உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தென் கொரிய அதிபர் அலுவலகத்தில் போலீஸார் சோதனை
அவசரநிலை அறிவிப்பு தொடர்பான வழக்கில் தென் கொரிய அதிபர் யூன் சுக் அலுவலகத்தில் போலீஸார் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
காஸாவில் மேலும் 29 பேர் உயிரிழப்பு
ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மேலும் 29 பேர் உயிரிழந்தனர். இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
ஆப்கன் அமைச்சர் படுகொலை
ஆப்கான் தலைநகர் காபூலில் தலிபான் அரசின் அகதிகள் நலத்துறை அமைச்சர் கலீல் ஹக்கானி (படம்) தற்கொலை குண்டுவெடிப்பு மூலம் புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.