நமது சிறப்பு நிருபர் புது தில்லி, டிச. 6:ஃபென்ஜால் புயல் பாதிப்புக்கு உதவுவதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (எஸ்.டி.ஆர்.எஃப்.) மத்திய அரசின் பங்காக ரூ.944.80 கோடியை தமிழக அரசுக்கு விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
தமிழகத்தில் கடந்த நவம்பர் 30 முதல் வீசிய ஃபென்ஜால் புயலால் மாநிலத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் புயலின் தாக்கம் கடுமையாகவும் திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட 14 மாவட்டங்களில் வழக்கத்தைவிட மழை கடுமையாகவும் பெய்தது.
இந்த மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், கட்டடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் கடுமையான சேதத்தை எதிர்கொண்டன.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு, வீடு கட்டும் திட்டத்தில் முன்னுரிமை, பயிர்கள், கால்நடைகளுக்கு இழப்பீடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் டிச. 3-ஆம் தேதி வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, புயலால் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மத்திய அரசு இடைக்காலமாக ரூ. 2,000 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் எழுப்பி விரைவாக மத்திய குழுவை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
This story is from the December 07, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 07, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தன்கரை பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பதவி நீக்கும் வகையில், அவர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அளித்தன.
காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ராகுல் அறிவுறுத்தல்]
காங்கிரஸ் குறித்து 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
அதானி விவகாரம்: தமிழகத்துக்கு தொடர்பில்லை
அதானி முறைகேடு விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை; தொழிலதிபர் அதானியை நான் சந்திக்கவும் இல்லை' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மதுரையில் இன்று மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா
தினமணி சார்பில் நடைபெறுகிறது
திருவண்ணாமலை தீபத் திருவிழா சிறப்பாக நடத்தப்படும்
பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி
மகாகவி பாரதியின் முழு படைப்புகளின் தொகுப்புகள்: பிரதமர் இன்று வெளியிடுகிறார்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் முழுமையான படைப்புகளின் தொகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தில்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்ல நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை (டிச.11) வெளியிடுகிறார்.
பங்கு பரஸ்பர திட்டங்களில் குறைந்த முதலீடு
பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முந்தைய அக்டோபர் மாதம் புதிய உச்சத்தைப் பதிவு செய்திருந்த முதலீட்டு வரவு நவம்பரில் 14 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
ஆட்சியை இழந்த அல்-அஸாத்: அச்சாரம் போட்ட ஹமாஸ்!
இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவை மீட்க அல்-அஸாத் தலைமையிலான அரசுப் படைகளுக்கு பல ஆண்டுகள் பிடித்தன.
ஹூண்டாய் விற்பனை 7% சரிவு
ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மொத்த வாகன விற்பனை கடந்த நவம்பர் மாதம் சரிந்துள்ளது.
10% சரிவு கண்ட சிறு கடனளிப்பு
சிறு கடனளிக்கும் நிதி நிறுவனங்களின் (மைக்ரோ ஃபைனான்ஸ்) கடன் விநியோகம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 10 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.