இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு மாநாடு 1925-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி கான்பூரில் நடைபெற்றது. ஆண்டுதோறும் அந்நாளை 'அமைப்பு தினம்' என்று அவ்வியக்கத்தினர் கொண்டாடி வருகின்றனர். இன்று அக்கட்சிக்கு நூறாவது ஆண்டு தொடக்கம்.
நூறாண்டுகளுக்கு முன்பு இந்திய அளவில் வடநாட்டில் நடைபெற்ற ஒரு உலகப் பார்வை கொண்ட கம்யூனிஸ்ட் இயக்க அமைப்புமாநாட்டிற்கு ஒரு தமிழர் தலைமை ஏற்றது தகைசால் தமிழர்களுக்கு தனித்த பெருமையாகும். ஆம்... சென்னையைச் சேர்ந்த ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்து கீர்த்திமிக்க வழக்குரைஞராக வளர்ந்த - சிந்தனையாளர், கட்டுரையாளர், இதழாளர், தொழிற்சங்கத் தலைவர், விரிந்த வாசிப்பாளர், அறிவியல் கருத்துகளை தமிழ் மண்ணில் வேரூன்ற வைக்க அரிதின் முயன்று உழைத்த வித்தியாசமான அரசியலாளர், போராளி என்ற பன்முக ஆளுமைமிக்க ம.சிங்காரவேலர்தான் கான்பூர் மாநாட்டிற்குத் தலைமை ஏற்றவர்.
அவரின் அன்றைய உரை பெயரளவுக்கு ஒரு மரியாதை நிமித்தமான உரையாக அல்லாமல், நன்கு திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட ஆழமான அரசியல் உரையாகவும், கம்யூனிஸ்ட் சித்தாந்தம் ஏன் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்குகிற ஓர் ஆய்வுரையாகவும், நன்கு நேரம் எடுத்து நிகழ்த்தப்பட்ட நீண்ட ஒரு விளக்கவுரையாகவும் அமைந்தது.
அச்சிறப்புமிக்க உரை காற்றில் கலந்து மறைந்து விடாமல் அச்சடிக்கப்பட்டு ஆவணமாக்கப்பட்டதுதான் சிறப்பினும் சிறப்பு. அவ்வுரை சிங்காரவேலரின் மேதமையையும் கம்யூனிஸத்தின் தனிச் சிறப்புகளையும் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் தேவைப்படுகிறது என்பதற்கான விளக்கங்களையும் ஒருசேரப் பறைசாற்றுகிற வரலாற்று ஆவணம்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு கட்சி வடிவில் திடீரென்று 1925-இல் தோன்றிவிடவில்லை. 1917 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற ரஷியப் புரட்சி இந்திய இளைஞர்கள் பலரை எழுச்சி கொள்ளச் செய்தது. மாற்றுச் சிந்தனைக்கு ஆற்றுப்படுத்தியது.
ரஷியாவில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றத்திற்கு அடிப்படையாக இருந்த மார்க் சீய லெனினியத் தத்துவத்தின்பால் இந்திய இளைஞர்கள் பலர் ஈர்க்கப்பட்டனர். இவர்களின் கட்டுக்கடங்காத தேசபக்தியும் பீறிட்டுக்கிளம்பிய புரட்சிகர உணர்வும்தான் அத்தகைய மடைமாற்றத்திற்கு வித்துக்களாக விளங்கின.
This story is from the December 26, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 26, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கணித மேதை எஸ்.எஸ். பிள்ளை
தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கோட்டை அருகேயுள்ள வல்லம் கிராமத்தில் 1901 ஏப்ரல் 5-இல் பிறந்தவர் சுப்பையா சிவசங்கர நாராயண பிள்ளை என்ற எஸ்.எஸ்.பிள்ளை. இவர் கணிதத்தில் 76 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அற்புதச் சாதனைகளைப் புரிந்தார்.
மகா கும்ப மேளாவில் ஏழுமலையான் மாதிரி கோயில்
ஜனவரி 13 முதல் பிப்ரவரி வரை உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள மகா கும்பமேளாவின் போது, செக்டார் 6-இல் உள்ள வாசுகி கோயிலுக்கு அடுத்து ஏழுமலையானின் மாதிரி கோயிலை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு கூறினார்.
தச்சன்குறிச்சியில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு
மதுரை மாடுபிடி வீரர் ஸ்ரீதருக்கு பரிசு
பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர்
பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டின் சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டார்.
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 7% அதிகரிப்பு
கடந்த டிசம்பர் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 7 சதவீதம் உயர்ந்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 64,028 கோடி டாலராக சரிவு
கடந்த மாதம் 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,027.9 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
வங்கதேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தேர்தல் முறைகேடு குறித்து விசாரணை
பதவியிலிருந்து அகற்றப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த அந்த நாட்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி!
நாட்டின் 57.2 சதவீத பள்ளிகளில் மட்டுமே மாணவர்களுக்கான கணினி வசதி இருப்பதும், 53.9 சதவீத பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி இருப்பதும் மத்திய கல்வி அமைச்சகத்தின் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான 'யுடிஐஎஸ்இ' தரவுகளில் தெரிய வந்துள்ளது.
12 மாதங்கள் காணாத சரிவு
இந்திய உற்பத்தித் துறை கடந்த டிசம்பரில் 12 மாதங்கள் காணாத சரிவைக் கண்டுள்ளது.
எஃப்சி கோவா அபார வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக புவனேசுவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது எஃப்சி கோவா.