மன்மோகன் சிங் என்றொரு மாமனிதர்!
Dinamani Chennai|December 28, 2024
துவாக ஒரு பிரபலமான மனிதரோ, உயர் பதவியில் இருக்கிற அல்லது இருந்த ஒருவரோ மறைந்து விட்டால் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சொல்வது சம்பிரதாயம். ஆனால், டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு, அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சிக்கு மாத்திரமல்லாமல், இந்திய தேசத்திற்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று குறிப்பிட்டால், அது சம்பிரதாயத்திற்காக அல்ல - முற்றிலும் உண்மையான கூற்று.
கே.வி.கே. பெருமாள்

மத்திய அரசில், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திடம் நீண்ட காலம் பணியாற்றியதன் காரணமாக, உயர் பதவிகள் வகித்த பலரோடு பேசுவதற்கும், சிலரோடு பழகுவதற்கும், அவர்களது திறமை பற்றி நுணுக்கமாக அறிந்து கொள்வதற்கும் எனக்கு வாய்ப்புக் கிட்டியது.

நான் பார்த்த அரசியல்வாதிகளில் - நிர்வாகிகளில், முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதராக டாக்டர் மன்மோகன் சிங் விளங்கினார். வர்த்தகத் துறையில் பொருளாதார ஆலோசகர் என்ற பதவியில் தொடங்கி, நிதித் துறையில் தலைமைப் பொருளாதார ஆலோசகர், மத்திய நிதித் துறை செயலர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், திட்டக் குழுவின் துணைத் தலைவர் என்று படிப்படியாக உயர்ந்து, பின்னர் இந்திய நிதி அமைச்சராக விளங்கி, கடைசியில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் என்ற தலைமைப் பதவிக்கு வந்தார் என்றாலும், தான் வகித்த பதவிகள் எதையுமே அவர் பதவிகளாகப் பார்த்ததில்லை - மாறாக, அவற்றை எல்லாம் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளாக-விடுக்கப்பட்ட சவால்களாக ஏற்றுக் கொண்டு, இடைவிடாமல் உழைத்தார். அந்த தன்னலமற்ற உழைப்புதான் இன்று அவரைப் பற்றி ஒவ்வொருவரையும் பேச வைத்திருக்கிறது.

எளிமைக்கும், நேர்மைக்கும் உதாரணமாகக் காட்டப்படக் கூடிய தகுதி பெற்றவராக அவர் திகழ்ந்தார். உணவு, உடை என்று எல்லாவற்றிலும் எளிமையைக் கடைப்பிடித்தவர். வீட்டிலிருந்து கொண்டுவரும் 2 அல்லது 3 சப்பாத்திகளும், வேகவைத்த சிறிது காய்கறிகளுமே அவரது மதிய உணவு. மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றாலும் ஒரு மணி நேரத்தில் அலுவலகம் திரும்பி விடுவார்.

கடைநிலை ஊழியரிடம்கூட கடிந்து பேச மாட்டார். பேச்சிலும் செயலிலும் தன்னால் யாரும் காயப்பட்டுவிடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருப்பார். பத்திரிகையாளர்கள் எவ்வளவு கோபப்படுத்தும் கேள்விகளைக் கேட்டாலும், சாதாரணமாக அவர்களது கேள்விகளை எதிர்கொள்வார்.

This story is from the December 28, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the December 28, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
கணித மேதை எஸ்.எஸ். பிள்ளை
Dinamani Chennai

கணித மேதை எஸ்.எஸ். பிள்ளை

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கோட்டை அருகேயுள்ள வல்லம் கிராமத்தில் 1901 ஏப்ரல் 5-இல் பிறந்தவர் சுப்பையா சிவசங்கர நாராயண பிள்ளை என்ற எஸ்.எஸ்.பிள்ளை. இவர் கணிதத்தில் 76 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அற்புதச் சாதனைகளைப் புரிந்தார்.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

மகா கும்ப மேளாவில் ஏழுமலையான் மாதிரி கோயில்

ஜனவரி 13 முதல் பிப்ரவரி வரை உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள மகா கும்பமேளாவின் போது, செக்டார் 6-இல் உள்ள வாசுகி கோயிலுக்கு அடுத்து ஏழுமலையானின் மாதிரி கோயிலை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு கூறினார்.

time-read
1 min  |
January 05, 2025
தச்சன்குறிச்சியில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு
Dinamani Chennai

தச்சன்குறிச்சியில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு

மதுரை மாடுபிடி வீரர் ஸ்ரீதருக்கு பரிசு

time-read
1 min  |
January 05, 2025
பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர்
Dinamani Chennai

பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர்

பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டின் சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டார்.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 7% அதிகரிப்பு

கடந்த டிசம்பர் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,028 கோடி டாலராக சரிவு

கடந்த மாதம் 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,027.9 கோடி டாலராகக் குறைந்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

வங்கதேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தேர்தல் முறைகேடு குறித்து விசாரணை

பதவியிலிருந்து அகற்றப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த அந்த நாட்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி!
Dinamani Chennai

நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி!

நாட்டின் 57.2 சதவீத பள்ளிகளில் மட்டுமே மாணவர்களுக்கான கணினி வசதி இருப்பதும், 53.9 சதவீத பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி இருப்பதும் மத்திய கல்வி அமைச்சகத்தின் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான 'யுடிஐஎஸ்இ' தரவுகளில் தெரிய வந்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

12 மாதங்கள் காணாத சரிவு

இந்திய உற்பத்தித் துறை கடந்த டிசம்பரில் 12 மாதங்கள் காணாத சரிவைக் கண்டுள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
எஃப்சி கோவா அபார வெற்றி
Dinamani Chennai

எஃப்சி கோவா அபார வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக புவனேசுவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது எஃப்சி கோவா.

time-read
1 min  |
January 05, 2025