ஜார்க்கண்ட் சட்ட மன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று மாலை பதவியேற்க உள்ளார்.
ராஞ்சியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் ராகுல், கார்கே, மம்தா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் 4வது முறையாக பதவியேற்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2000ஆம் ஆண்டு நவ.15ஆம் தேதி பீகார் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஜார்கண்ட் தனிமாநிலமாக உருவானது. ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த நவ.13 மற்றும் 20ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தை கைப்பற்ற நினைத்த பா.ஜ.க.வுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி 56 இடங்களிலும், பா.ஜ.க. கூட்டணி 24 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. பர் ஹைட் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஹேமந்த் சோரன் 39 ஆயிரத்து 791 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
This story is from the November 28, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 28, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு!
கணக்கு தணிக்கைத் துறை குற்றச்சாட்டு!!
அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களின் குடியுரிமை பறிபோகும் அபாயம்!
டிரம்ப் புதிய அறிவிப்பால் பரபரப்பு!!
மம்தாவால் கூட்டணியில் சலசலப்பு: தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தல்!
அமைதி காக்குமாறு ராகுல் வேண்டுகோள்!!
ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா ன்று பொறுப்பேற்பு!
இந்திய ரிசர்வ் வங்கியின் 25-ஆவது ஆளுநராக செயல் பட்டு வந்த சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நிறைவடைந்தது.
தனியாருக்கு வழங்கப்பட்ட மது விற்பனை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்!
ஜி.கே.வாசன் வற்புறுத்தல்!!
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 24-ஆம் தேதி போராட்டம்!
டாக்டர்.ராமதாஸ் அறிக்கை!!
நாடாளுமன்றத்தில் போராட்டம்: ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா, தேசியக் கொடி தந்த ராகுல்!
வாங்க மறுத்து சென்றார்!!
டெல்லியில் வெகு விரைவில் அமைப்பாளர் நியமனம் குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை!
கருத்திணக்கத்தை உருவாக்க முயற்சி!!
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 640 அதிகரிப்பு!
2 நாளில் ரூ.1,240 உயர்ந்தது!!
காற்றழுத்த தாழ்வுப்பகுதி நெருங்கியது: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!