புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் நவம்பர் 30 முதல் வீசத் தொடங்கிய பெஞ்சல் புயலின் காரணமாக பரவலான மற்றும் கடுமையான மழைப்பொழிவு தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெறப்பட்டது.
குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப்பொழிவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.
அத்துடன், மேற்படி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், பொதுக்கட்டடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைமுறையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
This story is from the December 03, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 03, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
'புறநானூறு' படத்திலிருந்து அதிரடியாக விலகிய சிவகார்த்திகேயன்?
அமரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் எஸ்.கே. 23 படத்தில் நடித்து வருகிறார்.
மீண்டும் ‘மேக்கப்' போட்ட துணை முதல்வர்!
கடந்த ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேச கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு! ரூ.5.90 ஆக நிர்ணயம்!!
கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் முறையாக ஒரு முட்டை பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்சில் இன்று நிலநடுக்கம்! ரிக்டரில் 5.6 ஆக பதிவு !!
பிலிப்பைன்சில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது.
எருமேலி, புல்மேடு பாதையில் சபரிமலை பக்தர்களுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி!
எருமேலி, புல்மேடு வனப்பாதையில் சபரிமலை பக்தர்களுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்: போராட்டம் நடத்திய தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.க. வினர் கைது!
சென்னை, டிச. 04 வங்காள தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளர் எஸ்.ஜெயபாலன் இல்லத் திருமண விழா! அமைச்சர் ஆவடிநாசர், ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பங்கேற்கிறார்கள்!!
திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் எஸ். ஜெயபாலன் இல்லத் திருமண விழாவில் அமைச்சர் ஆவடி நாசர்,ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
ஜானகி அம்மாளை நீண்டகாலம் மறந்துவிட்ட அ.தி.மு.க.வினர்! கவிஞர் காசி முத்து மாணிக்கம் பேச்சு!!
இப்போது நூற்றாண்டு விழா கொண்டாடியது ஏன்?
திருவண்ணாமலையில் ரூ.16 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் 3 மாதத்தில் இடிந்து விழுந்த அவலம்!
சமீபத்தில் பெய்த பலத்த மழையினால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது!!
வேலூரில் பயங்கர விபத்து: தடுப்பு சுவர் மீது ஜீப்மோதி 3 பேர் பரிதாப சாவு!
மருத்துவமனையில் மேலும் ஒருவருக்கு சிகிச்சை!!