போலிகளில் முதலில் முன் நிற்பது போலி சமூக வலைத்தளங்கள். சில நாட்களுக்கு முன்பு பொதுப்பணி துறை பெயரில் சமூக வலைதளத்தில் போலி பக்கம் உருவாக்கப்பட்டு வசூல் வேட்டை நடந்தது வெளியானது.
அச்சு அசலாக அரசு முத்திரையுடன், அதிகாரிகள் பற்றிய விவரங்களுடன் பக்கம் உருவாக்கப்பட்டிருந்தது. அதில், பொறியாளர் உள்ளிட்ட அலுவலர் பணிகளுக்கு ஆட்கள் எடுப்பதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்ல, அது தொடர்பாக, பலரும் ஆர்வமுடன் கேள்விகளை கேட்க, அதற்கென மொபைல் போன் எண் கொடுக்கப்பட்டு பொறுப்பாக பதிலும் சொல்லியிருக்கிறார்கள்.
பலரும் போன் செய்து கேட்ட பின்புதான் அதுபோன்று எந்த சமூக வலைதள பக்கமும் தொடங்கப்படவில்லை என உண்மையான பொதுப்பணித்துறை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் பலரும் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர் என்பது தான் வருத்தத்துக்குரிய விடயம்.
கலெக்டர்கள், உயர்காவல் அதிகாரிகள் பெயரில் முகநூல் கணக்குகளை தொடங்கி பண உதவி கேட்ட பரிதாபங்களும் இதற்கு முன்பு நிகழ்ந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த செந்தில்ராஜ் படத்தை வைத்து சமூக வலைதளங்களில் பணம் கேட்டு வாட்ஸ்அப் மூலம் வங்கிக் கணக்கிலும், ஆன்லைன் வாயிலாக கிஃப்ட் கார்டிலும் பணம் செலுத்துமாறு கோரிய செய்திகளும் இதற்கு முன்பு வந்தன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த ரவி ஐ.பி.எஸ். போலி சமூக கணக்கு பற்றியும் இணைய குற்றங்கள் பற்றியும் தொடர்ந்து பேசி வந்தவர். அவர் பெயரிலேயே போலியான முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டு, 'கவர்ச்சிகரமான முதலீடு' என்ற பெயரில் ரூபாய் 40 ஆயிரத்திலிருந்து 4 லட்சம் வரை பணம் ஈட்டலாம் என்று வங்கி கணக்குடன் விளம்பரம் வெளியாகியிருந்தது.
முகநூல் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த வங்கி கணக்கை ஆராய்ந்த போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வங்கி கணக்கு என்பதும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இணைய மோசடி கும்பலால் இந்த போலியான முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.
அங்கே இங்கே சுற்றி அரசுத்துறை நிறுவனங்களின் கணக்கில் கைவைப்பது தான் பெரிய மோசடி. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. போலியான 30 சமூக வலைதள கணக்குகளை கண்டறிந்து சி.பி.எஸ்.இ. தொடர்பான தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது.
This story is from the December 18, 2024 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 18, 2024 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
அம்மா எனக்கு ஸ்டீரெஸ்ஸா இருக்கு!
என் பக்கத்து வீட்டுச் சிறுமி அவந்திகா எல்லாரிடமும் நன்றாகப் பேசுவாள், பழகுவாள். அவளுக்கு ஐந்து வயது ஆகிறது. ஒரு முறை அவளது அம்மா அவளுடன் வீட்டு வாசலில் நின்றிருக்க,
பெண்மையை விரும்பக்கூடிய, பெண் நான்!.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்’ படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்துள்ள கியாரா அத்வானி, சோஷியல் மீடியாவில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை ட்வீட் செய்து வருகிறார். திரையுலகில் 10 வருடத்தை நிறைவு செய்திருப்பவருடன் ஒரு அழகிய உரையாடல்.
பெண்கள்....நுகர்வு பொருளா?
அரசியல் சமுதாய பயங்கரவாதங்களை பற்றி பேசிக் 'கொண்டிருக்கிறோம். ஆனால் தனிமனித பயங்கரவாதம் ஒன்று நம்மை அறியாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அது மனிதன் மனதில் வக்கிரமாக மண்டி கிடைக்கிறது. அதற்குக் காரணம் நுகர்வு கலாச்சாரம். இன்று தனிமனித நுகர்வு வெறி, கொலை வெறியாக மாறிக் கொண்டிருக்கிறது.
டார்க் சாக்லேட் நீரிழிவு அபாயத்தை குறைக்குமா?
நவீன காலக்கட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகள் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பேஷன்...பயங்கரம்?
நாகரீகம் என்பது ஒருவரின் நடை, உடை, பாவனைகளை குறிப்பது. சிலவேளைகளில் நாகரீகம் கோமாளித்தனமாக மாறிவிடுகிறது.
வரம் வாங்கி வந்தவள்...
காலை மணி ஆறு. “மீரா..... மீரா குட்டி எழுந்துக்கோ....ஏழு மணிக்கு ஆட்டோ வந்திடும்''. என்று மகளை எழுப்பினாள் யாழினி. \"போம்மா....தூக்கம் வருது.\" “புஜ்ஜு குட்டி.... அம்மா சொன்னா கேட்பே தானே. மணியாச்சு கண்ணா....\"
இமயமலையில் வறண்ட வன நதிகள்!—
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நடக்கும் அசம்பாவிதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் அனலாய் தகிக்கின்றன.
நாடாளுமன்றம்...நடப்பது என்ன?
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நடக்கும் அசம்பாவிதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் அனலாய் தகிக்கின்றன.
புஷ்பாஹீரோ...அடுத்து அரசியலா?
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் கைது விவகாரம் தான் சமீபத்திய சென்சேஷனல் டாபிக், புஷ்பா 2 படம் பார்க்க சென்ற போது திரையரங்க வளாகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் பலியான சம்பவம் தான் அல்லு அர்ஜூன் கைதாக காரணம்.
எப்போதும் திருப்திகரமாக இருப்பேன்!
மாடலிங்கில் இருந்துசினிமாவிற்கு வந்த நடிகை ஆஷிகா ரங்கநாத், தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.