அனைவரும் ஒன்றாக சேர்ந்தால் மட்டுமே இவை சாத்தியப்படும். இதைத் தான் நான் ஒவ்வொரு பள்ளிகள் மற்றும் விழிப்புணர்வு கூட்டத்திலும் கூறி வருகிறேன்’’ என்று பேச ஆரம்பித்த செங்கல்பட்டை சேர்ந்த 10 வயதான சிறுமி ப்ரசித்தி. இவ்வளவு சிறு வயதில் ஒரு லட்சம் மரங்களை நட்டு, என்னெற்ற விருதுகளையும், தமிழ்நாட்டின் சைல்ட் கிரீன் அம்பாசிடராக பட்டத்தையும் பெற்றுள்ளார். அவரின் இந்த பெரிய சாதனையின் ஆரம்பப்புள்ளி எது என்பதும், தனது இலக்கு மற்றும் இதனால் தான் அடைந்த இடத்தையும் கூறுகிறார்.
‘‘இயற்கை சார்ந்த அனைத்தும், கடல், பறவைகள், மரங்கள், தேனீக்கள், காற்று... இவங்க எல்லாம் என்னுடைய நண்பர்கள். நான் 6வது படிக்கும் போதே இந்த ப்ரசித்தி பார்ம்ஸ் ஃபவுண்டேஷன் ஆரம்பிச்சேன். இயற்கை கொடுத்த பெரிய ஆசான் மரம் தான். நாம் எவ்வளவு தான் ஒரு மரத்தை வெட்டினாலும், அது திரும்ப திரும்ப வளர்ந்து வரும். அதிலிருந்து நான் கற்றுக் கொண்டது தான் ‘never giveup’’ என்றவர் தன்னுடைய பயணத்தை முதன் முதலில் மரங்களில் இருந்து ஆரம்பித்துள்ளார்.
‘‘2016 வர்தா புயல் பற்றி எல்லாருக்கும் ரொம்ப நல்லாவே தெரியும். அந்த நேரத்தில் நடந்த இயற்கை சேதாரம் அதிகம். அதிலும் மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து விழுந்திருந்தது. அதை நான் பார்த்த போது ரொம்பவே கஷ்டமா இருந்தது. சொல்லப் போனால் நான் அந்த மரங்களை பார்த்து அழுதிட்டேன். அப்போ எனக்கு 4 வயசு. அதன் பிறகு தான் புரிந்தது அழுவதால் ஏதும் நடக்காது என்று. என்ன செய்யலாம்ன்னு யோசித்த போது, மரங்களை நடலாம்ன்னு முடிவு செய்தேன். 2 வருஷம் மரங்கள் நடுவது குறித்து தெரிந்து கொள்ள ஆரம்பிச்சேன். அதாவது ஒரு மரம் நடவேண்டும் என்றால் அதன் மண் வளம் சரியாக இருக்க வேண்டும். தோட்டம் எவ்வாறு அமைக்கலாம். செடிகளுக்கு தண்ணீர் எந்த அளவு பாய்ச்சணும், விதைகள் தேர்வு செய்யும் முறை... இப்படி மரம் வளர்ப்பது குறித்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு எனக்கு ஆறு வயசு இருக்கும் போது ‘ப்ரசித்தி பாரஸ்ட் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பினை துவங்கினேன். ஆரம்பிக்கும் போது ஒரு லட்சம் மரங்களை நடவேண்டும் என்ற குறிக்கோளோடுதான் துவங்கினேன்.
This story is from the June 01, 2023 edition of Thozhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 01, 2023 edition of Thozhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
விவாகரத்து நல்லதா... கெட்டதா?
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு விஷயம் டிரெண்டாகி வரும். இந்த வருடம் சோஷியல் மீடியா முழுக்க டிரெண்டில் பேசப்படுவது பிரபலங்களின் விவாகரத்தாகத்தான் உள்ளது.
நன்மை தரும் ப்ளாக் டீ
கே மல்லியா சினசிஸ் என்று அழைக்கப் படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகின்றது. ப்ளாக் டீ அருந்து வது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகின்றது. இதனால் பல நோய்களில் இருந்து இலகுவாக வெளிவரலாம் என சொல்லப்படுகின்றது.
வளமான வாழ்வு என்பது ஒரு முடிவிலி
பாரதி ஓரிடத்தில் சொல்லுவார், அறிவு சரியானவற்றைச் சொல்லும். மனம் தன் போக்கிலே போகும்' என்று. எப்போதுமே மனம் ஜெயித்துக்கொண்டே இருக்கும். ஆனால் அறிவு தோற்றுப் போகும்.
ஒரே கூரையில் ஐந்து அம்சங்கள்!
\"கோவிட் துவங்கும் போதுதான் நான் இதை ஆரம்பிச்சேன். ஒரு ஓட்டலுக்கான அனைத்து வேலைகளும் முடிந்து திறக்கும் தருவாயில் இருக்கும் போதுதான் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. எல்லாம் ஷட்டவுன் சொல்லிட்டாங்க.
குழந்தைகளின் நலம்...குடும்பத்தின் நலம்!
எந்தநாட்டில் குழந்தைகள் பிறந்தாலும் எல்லா மக்களுக்கும் தெரிந்த ஒன்று... குழந்தைகளின் உடலும், மூளையும் பிறந்த பின்பும் வளரும் என்பது. அதனால், குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முக்கியக் கடமையாகிறது.
தளராத தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்!
பிசினஸ் ஆரம்பிப்பது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. அதை சக்சஸ்ஃபுல்லாக நடத்துவதுதான் பெரிய விஷயம்.
குழந்தைகளின் சருமத்தை தாக்கும் அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ்
சருமத்தில் வறட்சி, பிக்மென்டேஷன் சபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு.
பெருமையான உறவுகள்
உறவுகள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதத்தில் அனுசரணையாக இருந்து குடும்பத்தை, குடும்ப கௌரவத்தை பாதுகாக்க தன்னால் இயன்றவற்றையெல்லாம் செய்து வந்தனர்.
அரங்கநாத சுவாமி கோயில்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாத சுவாமி கோயில் 108 'வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்டு ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது.
இதய இயக்க கோளாறை நீக்கும் ஆப்பிள்!
\"ஆப்பிள்\" பழம் உடலைப் பாதுகாக்கிறது, நலமளிக்கிறது, உணவு எனவும், உடல் நலத்திலும், பிணியகற்றுவதிலும் ஆப்பிளுக்குரிய பங்கு அளவிட முடியாதது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதன் விசேஷத் தன்மையை அறிந்திருக்க வாய்ப்பில்லை.