தினமும் கம்பு, கேழ்வரகு, தினை, வரகு போன்றவற்றில் சாதம், களி அல்லது கஞ்சி என சாப்பிட்டு வந்தார்கள். காலம் மாற நாம் அரிசி சாப்பாட்டிற்கு நம்மை பழக்கப்படுத்திக் கொண்டோம். ஆனால் இன்றைய தலைமுறையினர் அரிசி சாப்பாட்டையே தவிர்த்து பீட்சா, பர்கர் மட்டுமில்லாமல்... நாவின் சுவையினை தூண்டக்கூடிய பலவித துரித உணவுகளையே விரும்புகிறார்கள். மேலும் சிறுதானிய உணவுகளை சமைக்கும் நேரம் அதிகம் என்பதால், அதனை நம்மில் பலர் தவிர்த்து வருகிறார்கள். இதைப் புரிந்துகொண்டு பலர் சிறுதானியங்களை பொடி, மாவு வடிவத்தில் மதிப்பு கூட்டும் உணவுப் பொருளாக மாற்றி வருகின்றனர். அதனை நாம் தோசையாகவோ அல்லது சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இந்த வரிசையில் சிறுதானியத்தில் முசிலி போன்ற காலை சிற்றுண்டிகளை அறிமுகம் செய்துள்ளனர் கோவை மாவட்டத்தை சேர்ந்த அனுஷீலா, ஆனந்த ஜோதி தம்பதியினர்.
"கோவையில் வடவல்லிதான் என்னுடைய ஊர். பொறியியல் பட்டதாரி. கை நிறைய சம்ப ளத்தில் வேலை. கொரோனா எங்க எல்லோரையும் புரட்டிப் போட்டது. அந்த சமயத்தில் வீட்டில் இருந்தபடியே வேலைப் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட் டது. அலுவலக வேலையை வீட்டில் பார்த்து வந்தாலும், வேறு ஏதாவது சொந்தமாக தொழிலிலும் ஈடுபட லாம் என்ற யோசனை ஏற்பட்டது. ஒரே இடத்தில் அமர்ந்து வேலைப் பார்ப்பதால் ஏற்ப டும் அசவுகரி யம் ஒரு பக்கம் இருந்தாலும், வீட்டில் வேலைப் பார்க்கும் போது, ஏதாவது ஸ்நாக்ஸ் உணவுகளை சாப் பிட வேண்டும் என்ற ஆவல் ஏற்படும். நாவிற்கு சுவையாக இருந்தாலும், அது நாளடைவில் தன்னு டைய வேலையை காண்பிக்க துவங்கும். அதற்கு ஈடாக மேலும் காலை சிற் றுண்டிக்கு ஏற்ப ஒரு நல்ல ஆரோக் கிய உணவினை கொடுக்க விரும்பி னேன். நானும் மற்றவர்கள் போல் சிறுதானிய மாவு அல்லது சிறு தானியங்களை விற்பனை செய்யாமல், வித்தியாச மாக செய்ய விரும்பி னேன். அதில் துவங்கப் பட்டது தான் எங்களின் சிறுதானிய முசிலி நிறு வனமான 'ஹெர்போ லைட் நியுட்ரிலைட்'. ஒரு முழுமையான காலை உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது" என்ற ஆனந்த ஜோதி முசிலியின் தயாரிப்பு மற்றும் பேக்கிங் முறைகள் குறித்து விவரித்தார். அவரை தொடர்ந்தார் அவரின் மனைவி அனுஷீலா.
This story is from the 16-29, Feb 2024 edition of Thozhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 16-29, Feb 2024 edition of Thozhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
விவாகரத்து நல்லதா... கெட்டதா?
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு விஷயம் டிரெண்டாகி வரும். இந்த வருடம் சோஷியல் மீடியா முழுக்க டிரெண்டில் பேசப்படுவது பிரபலங்களின் விவாகரத்தாகத்தான் உள்ளது.
நன்மை தரும் ப்ளாக் டீ
கே மல்லியா சினசிஸ் என்று அழைக்கப் படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகின்றது. ப்ளாக் டீ அருந்து வது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகின்றது. இதனால் பல நோய்களில் இருந்து இலகுவாக வெளிவரலாம் என சொல்லப்படுகின்றது.
வளமான வாழ்வு என்பது ஒரு முடிவிலி
பாரதி ஓரிடத்தில் சொல்லுவார், அறிவு சரியானவற்றைச் சொல்லும். மனம் தன் போக்கிலே போகும்' என்று. எப்போதுமே மனம் ஜெயித்துக்கொண்டே இருக்கும். ஆனால் அறிவு தோற்றுப் போகும்.
ஒரே கூரையில் ஐந்து அம்சங்கள்!
\"கோவிட் துவங்கும் போதுதான் நான் இதை ஆரம்பிச்சேன். ஒரு ஓட்டலுக்கான அனைத்து வேலைகளும் முடிந்து திறக்கும் தருவாயில் இருக்கும் போதுதான் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. எல்லாம் ஷட்டவுன் சொல்லிட்டாங்க.
குழந்தைகளின் நலம்...குடும்பத்தின் நலம்!
எந்தநாட்டில் குழந்தைகள் பிறந்தாலும் எல்லா மக்களுக்கும் தெரிந்த ஒன்று... குழந்தைகளின் உடலும், மூளையும் பிறந்த பின்பும் வளரும் என்பது. அதனால், குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முக்கியக் கடமையாகிறது.
தளராத தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்!
பிசினஸ் ஆரம்பிப்பது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. அதை சக்சஸ்ஃபுல்லாக நடத்துவதுதான் பெரிய விஷயம்.
குழந்தைகளின் சருமத்தை தாக்கும் அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ்
சருமத்தில் வறட்சி, பிக்மென்டேஷன் சபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு.
பெருமையான உறவுகள்
உறவுகள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதத்தில் அனுசரணையாக இருந்து குடும்பத்தை, குடும்ப கௌரவத்தை பாதுகாக்க தன்னால் இயன்றவற்றையெல்லாம் செய்து வந்தனர்.
அரங்கநாத சுவாமி கோயில்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாத சுவாமி கோயில் 108 'வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்டு ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது.
இதய இயக்க கோளாறை நீக்கும் ஆப்பிள்!
\"ஆப்பிள்\" பழம் உடலைப் பாதுகாக்கிறது, நலமளிக்கிறது, உணவு எனவும், உடல் நலத்திலும், பிணியகற்றுவதிலும் ஆப்பிளுக்குரிய பங்கு அளவிட முடியாதது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதன் விசேஷத் தன்மையை அறிந்திருக்க வாய்ப்பில்லை.