சிட்டி ஆஸ்பத்திரி என்றாலே பணம் பறிக்கக்கூடிய ஆஸ்பத்திரி என்று திண்டுக்கல் மாநகரிலுள்ள பெரும்பாலான மக்கள் மத்தியில் பெயரெடுத்துள்ள 'சிட்டி எலும்பு முறிவு மருத்துவனை' திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் செயல்பட்டு வருகிறது. கடந்த 12ஆம் தேதி இரவு வழக்கம்போல் ஆஸ்பத்திரியிலுள்ள உள்நோயாளிகளை உறவினர்கள் பார்த்துவிட்டு வெளியே திரும்பிக்கொண்டிருந்த சமயத்தில், முதல் தளமான வரவேற்பு அறையின் அருகிலிருந்து திடீரென புகை யுடன் தீ பரவுவதைக் கண்ட ஊழியர்களும், பார்வையாளர்களும் பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள். இதுகுறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் தீ மளமளவென முதல் தளம் வரை பரவியது.
முதல் தளம் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிவதால் எழும் புகைமூட்டத்தில் சிக்கிக்கொண்டு மருத்துவமனையில் மூன்று தளத்திலிருந்த நோயாளிகளும் "ஐயோ! எங்களைக் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்" என அழுதவாறே குரல் கொடுத்தனர். சிறிது நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஸ்பாட்டுக்கு வந்து, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியிலும், மருத்துவமனையினுள் சிக்கிக்கொண்ட நோயாளிகள் அனைவரையும் பாதுகாப்புடன் மீட்கும் முயற்சியிலும் இறங்கினர். தீயணைப்பு வீரர்கள், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 30க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளைக் காப்பாற்றி, 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல்லிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் காட்டுத்தீ போல் நகர் முழுவதும் பரவியதால் உள்நோயாளிகளின் உறவினர்களும், பொதுமக்களும் ஆஸ்பத்திரிக்கு பதட்டத்தோடு படையெடுத்தனர். வெகுவிரைவாக தீயணைப்புப் படையினர் ஒட்டுமொத்த தீயையும் கட்டுப்படுத்திவிட்டு அனைத்து வார்டுகளையும், மருத்துவமனை லிஃப்டையும் ஆய்வு செய்த போது தான் அதிர்ச்சியடைந்தனர். லிஃப்ட் மூலம் தப்பி வெளியேற முயன்ற ஒரு சிறுமி உள்ளிட்ட ஆறு பேர் பரிதாபமாக லிஃப்டுக்குள் உயிரிழந்து கிடந்தது பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
This story is from the December 18-20,2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 18-20,2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மறைந்தார் பெரியாரின் பேரன்!
திராவிட இயக்கத்தின் முகவரியான, தந்தை பெரியார் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், அரசியலில் தனக்கென தனியான ஆளுமைத் திறனுடன் காங்கிரஸ் கட்சியில் பயணித்துவந்தவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில்... சிகிச்சை பலனின்றி டிசம்பர் 14-ஆம் தேதி காலை உயிரிழந்தார்.
தமிழன்டா!
உலக செஸ் சாம்பியன் குகேஷ்!
ரங்கநாதருக்கு வைரக்கிரீடம்! நெகிழ்ச்சியில் ஜாஹீர் ஹூசைன்!
கடந்த 2021ம் ஆண்டு, டிசம்பர் 10ஆம் தேதி பரதநாட்டியக் கலைஞரான ஜாகீர் ஹுசைன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ரங்கநாதரை தரிசிக்கச் சென்றார்.
மதவாதப் பேச்சு! நீதிபதிக்கு கடும் எதிர்ப்பு!
நீதித்துறையை காவிமயமாக்கும் வேலையை ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்புகள் பல காலமாகத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றன.
கைதி எண் 9658
ஆயில்யத்து குற்றியேரி கோபாலன் என்னும் மிக நீண்ட பெயருக்குள் யார் இருக்கிறார் என்பதை உங்களுக்கு எட்டிப் பார்க்க தோன்றலாம். அந்த பெயருக்குள் ஒரு அனல் வீசும் தகிப்பு, காலந்தோறும் வாழ்ந்து வந்திருக்கிறது. அந்த பெயர், பயணம் செய்யாத இடம் என்று எதுவுமே இல்லை.
விதிமீறல் மருத்துவமனை! பலியான 6 உயிர்கள்!
மனிதாபிமானத்தை மறந்து, வருமானத்துக்காகவே பெரும்பாலான டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதால் தற்போது பல உயிர்கள் பறிபோகின்றன.
இந்துத்வா கலெக்டர்! குமுறும் வி.சி.க.வினர்!
தமிழ்நாட்டில் வி.சி.க.விற்கு எதிராக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா செயல்படுவதாக சர்ச்சை கிளம்புவது குறித்து, எதிராக மாவட்ட கலெக்டர்கள்!' என்ற செய்திக்கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தோம். வி.சி.க. சார்பாக ஏற்றப்படும் கொடிக்கம்பங்களை அகற்றுவதில் அவர் குறியாக இருப்பு குற்றம்சாட்டியது குறித்தும் எழுதியிருந்தோம்.
கழுத்தை நெரிக்கும் பா.ஐ.க! விஜய்க்கு தூது!
காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணத்தையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அனைத்துத் தரப்பு மக்களையும், அரசியல் நோக்கர்களையும் கூர்ந்து பார்க்க வைத்துள்ளது.
விரக்தியில் ஐக்கி! எதிர்க்கும் மாஜி!
\"இங்கு வருவதற்கே விருப்பமில்லை அவருக்கு! என்னுடைய விஷயத்தை முடித்துவிட்டுப் போ!\" என மாஜி ஒருவர் அழுத்தம் கொடுக்க, எதிர்ப்புகளுக்கு மத்தியில் கோவைக்கு வந்திருக்கிறார் ஈஷா நிறுவனரான ஐக்கி வாசுதேவ்.
அர்ஜுன் ரெட்டி விலகல் மர்மம்! அதிரடி பின்னணி!
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த அர்ஜுன் ரெட்டி, அக்கட்சியிலிருந்து முழுமையாக விலகியிருக்கிறார்.