மணிப்பூரில் மீண்டும் முற்றியுள்ள வன்முறை போராட்டத்தில் மேலும் 4 எம்எல்ஏக்களின் வீடுகளை போராட்டக்காரர்கள் எரித்தனர். முதல்வர் பிரேன் சிங் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்க முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 6 பேரை கொன்ற தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு மெய்டீஸ் இனத்தினர் 24 மணி நேர கெடு விதித்துள்ளனர். மணிப்பூரில் இனக்கலவரம் காரணமாக கடந்த ஓராண்டாக பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதற்கிடையே, ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் சமீபத்தில் கடத்தப்பட்ட 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் வன்முறை வெடித்தது. தலைநகர் இம்பாலில் 5 மாவட்டங்களிலும் போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். 3 அமைச்சர்கள் மற்றும் 6 எம்எல்ஏக்கள் வீடுகளை தீயிட்டு எரித்ததால் பதற்றம் அதிகரித்தது. பல இடங்களிலும் போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். உடனடியாக காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது.
ஆனாலும், போராட்டக்காரர்கள் நேற்று முன்தினம் இரவிலும் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் 3 பாஜ மற்றும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏவின் வீட்டை அவர்கள் தீ வைத்து எரித்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்ததால், சிறு சேதங்கள் மட்டுமே ஏற்பட்டன. அந்த சமயத்தில் வீடுகளில் எம்எல்ஏக்கள் அவர்களின் குடும்பத்தினர் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எம்எல்ஏக்களின் வீடுகளை எரித்த கும்பல், இம்பாலின் கிழக்கில் உள்ள லுவாங்ஷாங்பாமில் உள்ள முதல்வர் பிரேன் சிங்கின் பூர்வீக வீட்டையும் தாக்க முயன்றனர்.
This story is from the November 18, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 18, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மாமல்லபுரத்தில் 33 ஆண்டுகளுக்கு பிறகு 90.50 கோடியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க இலக்கு
கோயம்பேடு மார்க்கெட்டில் நிறுத்தி இருந்த காரை திருடி ஊர் சுற்றிய வாலிபர்
கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (52). இவர், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
டிசம்பர் 11ம் தேதி அண்ணாசாலையில் ரூ.20 லட்சம் பறித்த விவகாரம் சிறையில் உள்ள சிறப்பு எஸ்ஐக்கள் சன்னி லாய்டு.ராஜா சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு
வீட்டில் நடந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் | தலைமறைவாக உள்ள 2 வணிகவரித்துறை அதிகாரிகளை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு
திருவொற்றியூர், எண்ணூர் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்
கடல் வாழ் ஆமைகளில் அரிய வகை உயிரினமான ஆலிவ் ரிட்லி ஆமைகள், ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் இனப்பெருக்கத்திற்காக தமிழக கடற்கரைகளை நோக்கி வரும்.
வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு தேவி எல்லம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில் தேவி எல்லம்மன் கோயில் உள்ளது.
நான் படித்த பள்ளியிலேயே சீஃப் கெஸ்ட்...
கண்கலங்கிய சிவகார்த்திகேயன்
திருத்தணியில் தவெக மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்பு
தவெக தலைவர் விஜய், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களை நியமித்து வருகிறார்.
அண்ணா நினைவு தின மவுன ஊர்வலம் மெரினா பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு மவுன ஊர்வலம் நடைபெறுவதால், மெரினா பகுதியில் இன்று காலை முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் நாதக-தபெதிகவினர் மோதல்
வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 51 பேர் மீது வழக்கு
தமிழிசை கடும் காட்டம் ‘ஒர்க் பிரம் ஹோம்' விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது
ஒர்க் பிரம் ஹோம் மற்றும் இணையதளத்தில்தான் பணி செய்ய வேண்டும் என்று நினைத்தால் நடிகர் விஜயால் எதுவும் செய்ய முடியாது” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.