பெஞ்சல் புயல் காரணமாக 48 மணி நேரம் இடைவிடாமல் பெய்த பேய்மழையால் விழுப்புரம் மாவட்டம் வெள்ளக்காடாக மாறியது. தேசியபேரிடர் மீட்புகுழு மற்றும் மாநில பேரிடர்மீட்பு குழுவினர், காவல்துறை, தீயணைப்பு, ேபரிடர் மேலாண்மை துறை இணைந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். நேற்று 2வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்தன. தற்போதுவரை 88 நிவாரண முகாம்களில் 5,694 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சாத்தனூர் அணையிலிருந்து நேற்றுமுன்தினம் 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் மழைநீருடன் சேர்ந்து விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் காட்டாற்று வெள்ளம்போல் பாய்கிறது.
இதன் காரணமாக மலட்டாறு உள்ளிட்ட கிளை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. விழுப்புரம் அருகே திருப்பாச்சனூர், மேட்டுப்பாளையம், பில்லூர், காணை, மரக்காணம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் 20 இடங்களில் தரைப்பாலம் மூழ்கியதால் 150 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் பகுதியில் மலட்டாற்றின் பாலத்தை கடந்து தண்ணீர் சென்றதால் காலை முதல் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகளவு தண்ணீர் சென்ற நிலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், 2 ஆயிரம் குடியிப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், திருச்சி மாநகராட்சி, புதுக்கோட்டை நகராட்சி ஊழியர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. 13 ஆயிரம் ஹெக்டர் அளவிற்கு நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.
This story is from the December 03, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 03, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மளிகை கடைக்காரரை வெட்டிய வழக்கில் அதிமுக பிரமுகரின் மகன் உட்பட 2 பேர் பிடிபட்டனர்
திருத்தணியில், மளிகைக் கடைக்காரரை வெட்டிய வழக்கில் தலைமறைவான அதிமுக பிரமுகர் மகன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
மூழ்கிய தரைப்பாலத்தால் மக்கள் அவதி
கனமழை பெய்ததால் செல்லாத்தூர் ஏரி முழுவதும் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் மடுகூர் செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் விசிகவினர் சாலை மறியல்
திருத்தணி அருகே காசிநாதபுரம் காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் 3 தெருக்கள் உள்ள நிலையில் ஒரு தெருவில் மட்டுமே கழிவுநீர் கால்வாய் உள்ளது.
நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு திருத்தணி-பொதட்டூர்பேட்டை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
திருத்தணி அருகே நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.
உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பால் வாலிபர் மரணம்
மீஞ்சூர் அருகே உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்லத் தடை மீன்வளத்துறை உத்தரவு
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி 59 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்ட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.
மடம் கிராமத்தில் உடைப்பு ஏற்பட்ட செய்யாற்றின் கரை சீரமைப்பு எம்எல்ஏ சுந்தர் ஆய்வு
உத்திரமேரூர் ஒன்றியம் மடம் கிராமத்தில் செய்யாற்றில் உடைந்த கரை உடனடியாக சீரமைக்கப்பட்டது. இதனை, எம்எல்ஏ சுந்தர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா நேற்று நடைபெற்றது.
பெஞ்சல் புயல் காரணமாக 300 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்தது
செங்கல்பட்டு அருகே மனாளிநத்தம் பகுதியில் 300 ஆண்டு பழைய புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையின் இருபுறமும் புளியமரம் அமைந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்
பெஞ்சல் புயல் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சுமார் 5000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானதால், விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.