வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதாக 17,235 புகார்கள் பெற்றப்பட்டுள்ளன. இதற்கு தீர்வுகாண கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கி, பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை உள்பட வட தமிழக மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது. வடகிழக்கு பருவமழை இயல்பை விட 34 சதவீதம் அதிகமாக பெய்தது முக்கிய காரணமாக ஆகும். சென்னையை பொறுத்தவரை இயல்பை விட மொத்தம் 25 சதவீதம் வரை மழை அதிகரித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 33 கால்வாய்களில் 53.42 கி.மீ. நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டன.
நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 15 கால்வாய்களில் 107.06 கி.மீ. நீளத்திற்கு தூர்வாருதல் மற்றும் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநகராட்சி பராமரிப்பில் உள்ள 16 சுரங்கப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள 6 சுரங்கப்பாதைகள் என மொத்தம் 22 சுரங்கப்பாதைகளில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, நீர்த்தேக்கம் கண்காணிக்கப்பட்டது.
This story is from the December 25, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 25, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
70 நாடுகளை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனி ஊழியர்கள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு மகிழ்ந்தனர்
70 நாடுகளை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனி ஊழியர்கள் 220 பேர் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு மகிழ்ந்து, செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு, குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறை
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு மற்றும் குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டி
சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் திமுகவினர் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும், அவரைக் காப்பாற்றும் அதிமுக பாஜ கள்ளக்கூட்டணியையும் கண்டித்து திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பைக் மீது வாகனம் மோதி விபத்து உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாப பலி
பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அரசு உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாபமாக பலியானார்.
'96' திரைப்பட பாணியில் கவரப்பேட்டை அரசுப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘96’ திரைப்பட பாணியில் 1996ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்பு சந்தை அமையும் இடம் ஆய்வு
பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 200 ரூபாய் பார்க் பகுதியில் உள்ள சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு சந்தை வருகின்ற 9ம்தேதி நள்ளிரவில் தொடங்கி 16ம்தேதி வரை நடைபெறுகிறது.
இடைக்கழிநாடு பேரூராட்சியில் பொங்கல் விழா துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்திற்கு அழைப்பிதழ் - கட்சி நிர்வாகிகளுக்கு சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்
இடைக்கழிநாடு பேரூராட்சியில் நடைபெறும் பொங்கல் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
மதுராந்தகம் சுற்று வட்டார பகுதிகளில் மதுவிலக்கு சட்ட விழிப்புணர்வு சுவரொட்டிகள்
மதுராந்தகம் மற்றும் செய்யூரை சுற்றியுள்ள கிராமங்களில் மதுவிலக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி
அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டிகள் வரும் பிப்ரவரி 1ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.