CATEGORIES
Categories
தமிழ் இருக்கும் வரை தமிழர் தந்தை புகழ் இருக்கும்!
தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை என்றாலும் தமிழ் பத்திரிகை உலகிற்கு அவர் உருவாக்கி தந்த வழிகாட்டும் நெறிமுறைகள் இன்னும் காலம் காலமாக இத்துறையில் உள்ளவர்களை வழிநடத்தும் தன்மையில் இருப்பதை காண்கிறோம்.
எத்தனை 71 மனிதர்கள்?
நமக்கெல்லாம் பெரிய உடல் நலக் குறைவு வந்தால் என்ன செய்வோம்? உயிரை, குடும்பத்தை பாதுகாக்க முயற்சி செய்வோம். பொருளாதார பலம், ஆள் பலம் எல்லாவற்றையும் சேர்த்து வைப்போம். அப்படியே நோயிலிருந்து மீண்டு விட்டால் அதன் பின் நம் சுய பராமரிப்பையும், சுற்றியுள்ளவர்களின் பராமரிப்பையும் பற்றியே நினைப்போம். இதுதான் சாதாரண மனிதர்கள் செய்யக்கூடியது.
ஐ.நா. ஒருங்கிணைப்பாளரான இந்தியப் பெண்!
இந்தோனேசியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பாளராக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வாலை ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நியமித்துள்ளார்.
நாய் கடிக்கு காரணமாகும் நாய் பிஸினஸ்!
கடந்த சில மாதங்களாக சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரையும் நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
பூமியை நோக்கி வரும் எரிகல்கள்...?
சமீபத்தில் விண்வெளியிலிருந்து இரண்டு எரிகற்கள் பூமிக்கு மிக அருகில் நெருங்கி வருவதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் எச்சரித்தது.
பிளாஸ்பேக் தொடர்
அந்தச் சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடந்தது. திருநெல்வேலி பக்கத்தில வெற்றிகரமா கச்சேரிய நடத்தி முடிச்சிட்டு ஊருக்கு வந்த உடனே வரதராசனுக்கும் உடம்பு சரியாப்போச்சு. தம்பிங்க ஊருக்கு வந்து சேர்றதுக்கும் வரதராசன் எலக்ஷன் கச்சேரிக்கு மதுரைக்குப் பொறப்படறதுக்கும் சரியாக இருந்தது.
தேவ மயக்கம்!
செழினி சைக்கிள் ஸ்டேண்டை நோக்கி வந்தாள். மாணவ மாணவிகள் சிரிப்பும் பேச்சுமாக தங்களின் சைக்கிள்களை எடுத்துக் கொண்டிருந்தனர். வரிசை வரிசையாக நிறுத்தியிருந்த சைக்கிள்களிலிருந்து தன் சைக்கிளை அவளும் உருவினாள்.
சமரசமில்லாத, வேலை முக்கியம்!
கடந்த சில வருடங்களாக தமிழில் நடிப்பதை தவிர்த்து வரும் அஞ்சலி, மீண்டும் தமிழ் பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்க முயன்று வருகிறார்.
பொய்தான் பா.ஜ.க.SBI பலமா?
ஒரு சினிமா சம்பத்தப்பட்ட யூடியூப் சேனலில்... மூன்று செய்தியாளர்கள் கலகலப்பாக உரையாடுகிறார்கள். அப்போது பாஜக தலைவர் (?) அண்ணாமலை பயோபிக்கில் நடிகர் விஷால் நடிக்கப்போவதாக செய்தியை பகிர்கிறார்கள்.
கலப்பட மசாலா...கவனம்?
மசாலா இல்லமல் நமது உணவு எதுவும் இல்லை. உலகளவில் பாரம்பரிய உணவுகள் அனைத்திலும் ஏதாவது ஒரு மசாலா சேர்க்கப்பட்டு இருக்கும். உணவிலிருந்து ரிக்க முடியாத இந்த மசாலாவிலும் கலப்படக் கைவண்ணம் காட்டிவிட்டனர்.
உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல....
சிறுமியாக இருந்த நாட்களில் தேர்தல், அரசியல் இதெல்லாம் தெரிந்து கொண்டபோது தேர்தலை முன்னிட்டு நடக்கும் குளறுபடிகள், விதிமீறல்களைப் பார்த்திருக்கிறேன்.
விரயமாகும் உணவுகள்.... தடுப்பது எப்படி?
இன்றை நவீன யுகத்தில் பசித்தவனுக்கு உணவு அளிப்பதை விட அதை வீணாக்குவதை சாதாரணமாக செய்வதுதான் வேதனை அளிக்கிறது. நல்ல உணவைச் சமைத்து அதைக் கொட்டுவது என்பது பல்வேறு நாடுகளுக்கும் பழகிப்போன விஷயமாகவே உள்ளது.
வாழ்க்கையை முழுமையாக ரசிக்கிறேன்!
டாப்ஸி... தன்னம்பிக்கை மிகுந்தவர், விரைந்து தெளிவாக முடிவெடுக்கும் திறன் வாய்ந்தவர், தன் கோணங்களை அறிந்தவர், தனக்கு என்ன வேண்டும், எது தேவையில்லை என்பதை வெளிப்படுத்த அஞ்சாதவர்... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஐ.ஐ.டி. படித்தாலும் வேலை இல்லை!
அங்கு, ஃபெயில் ஆகாமல் பாஸ் மார்க் எடுக்கவே கடினமாக உழைக்க வேண்டும்.எனவே, 4 வருடங்கள் முடிந்த பிறகு அதிலிருந்து தேர்வான மாணவர்களின் தரமும், சிந்திக்கும் திறனும் மற்ற கல்லூரி மாணவர்களை விட தரமானதாக இருக்கும்.
அதிகரிக்கும் சிசேரியன்...
பிள்ளைப்பேறு என்பது செத்துப் பிழைப்பது போன்றது. ஆனாலும், நவீன மருத்துவத்துக்கு முன்பு சுகப்பிரசவத்துக்கு அதிக வாய்ப்பிருந்தது. மக்களின் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை, உடல் உழைப்பு காரணமாக அது நடந்தது.
கிராமத்து ராசாக்கள்
ஊரில் இருந்து கொண்டுக்கிட்டு வந்த காசும் அடுத்த மாசக் கச்சேரிக்கு வாங்கியிருந்த அட்வான்சும் தீர்ந்த பெறகு, இந்தக் கச்சேரிக் குடும்பத்தோட அம்மா சின்னத்தாயி, தன்னோட காதில் போட்டு வச்சிருக்கற தண்டட்டியக் கழற்றி கரியணம்பட்டிகிட்டே அடகு வச்சு மறுபடியும் கச்சேரி செய்ய ஊருக்குத் தள்ளிவிடுவாங்க.
என்னைப் பற்றி..
நான் கோபிசெட்டிபாளையம் கொளப்பலூரைச் சேர்ந்தவள். பொறியியல் படித்துள்ள எனக்கு எழுத்தின் மீது ஆர்வம் இருந்ததால், அதையே எனது துறையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.
தேர்தல் களத்தில் கங்கனா பன்சூரி!
இமாச்சல பிரதேசத்தில் பிறந்த கங்கனா ரணாவத், தனது 16 வயதில் நடிக்க வேண்டும் என்று விரும்பி டெல்லியில் நாடக இயக்குநர் அர்விந்த் கவுரிடம் நடிப்பை கற்றுக் கொண்டார்.
தவிக்கவிடுவது சரியா?
மனிதன் ஒரு சமூக விலங்கு என்றார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள். அவன் சுயநலமான விலங்கு என்பதையும் சொல்லியாக வேண்டும்.
அழகுக்கு அளவு கோல் கிடையாது!
சீதா ராமம் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து பான் இந்தியா நடிகையாக மாறி விட்ட நடிகை மிருணாள் தாக்கூர், தெலுங்கு, இந்தி, தமிழ், மராத்தி படங்களில் இடைவிடாமல் நடித்து வருகிறார்.
டியர்
குறட்டையால் கணவன்மனைவிக்குள் ஏற்படும் மன விரிசல் எந்த எல்லை வரை செல்கிறது என்பதே படத்தின் கதை.
வெண் மேகங்கள்
வானம் இருண்டு கொண்டிருந்தது. காற்று குளிர்ந்து வீசியது. கிருஷ்ணா வானத்தை பார்த்தாள். 'தலைக்கு மேல் வேலை உள்ளது. இந்த நிலையில் மழை வந்தால் இதுவரை செய்து வைத்த எல்லா வேலைகளும் கெட்டுவிடும்' என்று கவலைப்பட்டாள்.
புதைந்து கிடக்கும் சரித்திரம்!
ஓரிரு வாரங்களாக ஒரு நிகழ்வு குறித்த செய்தியைத் தொடர்ச்சியாக செய்தித்தாளில் வாசித்தேன். எங்கள் மாவட்டத்தில் உள்ள கடையம் என்ற ஊரில் பள்ளம் தோண்டும் பொழுது 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகளைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். கடையம் என்பது மிகப் பழமையான ஊர்.
காடுகளிலும் கெடும் மண் வளம்!
இன்றைய நவீன காலத்தில் மாறி வரும் சுற்றுச் சூழல், மாசுடன் நச்சுக்களும் அதிகரித்து வருவதால் நீர் மட்டுமல்ல, நிலமும் சீர்கெட்டு வருகிறது.
மம்முட்டி கற்று தந்த பாடம்!
'பருத்தி வீரன்' படத்தில் முத்தழகு வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி, தமிழில் பீல்டு அவுட் ஆன நிலையில் 2017-ல் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கடல் எல்லை: இந்தியாவின் 'பிடி தளர்கிறதா?
இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காகவும், பிராந்திய வளர்ச்சிக்காகவும் இந்தியப் பெருங்கடல் மண்டல நாடுகளுடன் ராஜதந்திர, ராணுவ, பொருளாதார உறவுகளை இந்தியா அதிகரித்துள்ளது.
திறமையை வெளிப்படுத்த முடியாத பெண்கள் ?
ஆணுக்கு பெண் சமம் என ஒப்புக் கொண்டாயிற்று. ஆணுக்கு இணையான விகிதா ச்சாரத்தில் இல்லாவிட்டாலும், 3ல் 1பங்கு எனவேலை வாய்ப்பிலும் ஆட்சி அதிகாரத்திலும் இடம் கொடுத்தாயிற்று என்றே வைத்துக் கொள்வோம்.
உயிரில் கலந்த உறவே....
அன்று ஏனோ, மழைவிடாமல் பெய்து கொண்டே இருந்தது. அதன் குளிர்ச்சி கொடுத்த சுகத்தினாலோ, பணியின் களைப்பினாலோ என்னவோ வானதி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்...
விலை கொடுத்து வாங்கும் குடிநீர்...கவனம்!
இன்றைய காலக்கட்டத்தில் இயற்கையான முறையில் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக விநியோகிக்கப்படும் தண்ணீரை தள்ளி வைத்து விட்டு, கடைகளில் விற்கப்படும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலை இயல்பாக இருக்கிறது.
அதிகரிக்கும் வெப்ப அழுத்தம்....ஏ.சி. இல்லாமல் இருக்கமுடியுமா?
உலகம் நெருப்பால் அழியும் என நம் முன்னோர்கள் பயமுறுத்தியது நடக்ககூடும் என்று நம்பவைக்கிறது தற்போதைய பருவநிலை. பகலில் இருக்கும் சூரிய வெப்பம் இரவிலும் அப்படியே இருந்து காலையிலிருந்து மீண்டும் தகிக்கிறது.