CATEGORIES
Categories
பிகார் தேர்வு வினாத்தாள் கசிவில் அரசுக்கு தொடர்பு
தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
'இண்டி' கூட்டணியில் காங்கிரஸ் தனது தலைமையை நிரூபிக்க வேண்டும்; ஒமர் அப்துல்லா
புது தில்லி, டிச 14: கூட்டணி கட்சி களிடையேஅதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், 'இண்டி' கூட்டணியில் தனது தலைமையை காங்கிரஸ் நிரூபிக்க வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான ஓமர் அப்துல்லா வலியுறுத்தினார்.
அமெரிக்கா: 'சாட்ஜிபிடியை உருவாக்கிய நிறுவனம் மீது குற்றஞ்சாட்டிய இந்திய வம்சாவளி இளைஞர் தற்கொலை
நியூயார்க், டிச.14: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் சாட்ஜிபிடி-யை உருவாக்கிய ‘ஓபன்ஏஐ’யின் நிறுவனம் மீது குற்றஞ்சாட்டிய முன்னாள் ஊழியரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுச்சிர் பாலாஜி (26) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
விவசாயிகள் பேரணி: மூன்றாவது முறையாக தடுத்து நிறுத்தம்
தில்லி நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற 101 விவசாயிகளை ஹரியாணா காவல் துறை மூன்றாவது முறையாக சனிக்கிழமை தடுத்து நிறுத்தியது.
பெண் மருத்துவர் கொலை வழக்கில் இருவருக்கு ஜாமீன்: எதிர்ப்பு தெரிவித்து இளம் மருத்துவர்கள் போராட்டம்
கொல்கத்தா, டிச.14: ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில், கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகியோருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை கண்டித்து இளம் மருத்துவர்கள், அரசியல் கட்சியினர் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்
தில்லியில் இருந்து ஜெட்டாவுக்கு சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் ஒரு பயணிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், பாகிஸ்தானில் அந்த விமானம் சனிக்கிழமை அவசரமாக தரையிறங்கப்பட்டது.
சொந்த மக்களை காக்க முடியவில்லையா?
பிரதமருக்கு மணிப்பூர் எம்.பி. கேள்வி
அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா: மக்களவையில் நாளை தாக்கல்
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான 2 மசோதாக்களை மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை (டிச.16) தாக்கல் செய்யவுள்ளது.
வெளிப்படை, துணிவின் அடையாளம் ஈவிகேஎஸ்!
சென்னை, டிச.14: வெளிப்படைத்தன்மை, துணிவின் மறு உருவமாக விளங்கிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவு அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 தொடர்பான வழக்கு: இந்திய கம்யூனிஸ்ட் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு
புது தில்லி, டிச.14: வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 தொடர்பான வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சாவர்க்கரை புகழ்ந்து இந்திரா காந்தி எழுதிய கடிதம்: மக்களவையில் கடும் வாக்குவாதம்
புது தில்லி, டிச.14: வி.டி.சாவர்க்கரை புகழ்ந்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எழுதிய கடிதத்தை சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே படித்ததால் மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தென் மாவட்டங்களில் பயிர்ச் சேதம் கணக்கிட முதல்வர் உத்தரவு
தென் மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், பயிர்ச் சேத விவரங்களை உடனடியாக கணக்கிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
பிரதமர் முன்மொழிந்தவை வெற்றுத் தீர்மானங்கள்
புது தில்லி, டிச. 14: மக்களவை உரையில் பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த 11 தீர்மானங்களை 'வெற்றுத் தீர்மானங்கள்' என்று விமர்சித்த காங்கிரஸ், ஊழலில் சகிப்புத்தன்மை இல்லாத பாஜக, அதானி விவகாரம் குறித்து விவாதிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியது.
தமிழ் போன்ற தேன்!
கம்பனின் வியத்தகு தமிழ்க்காதல், காப்பியத்தின் பல இடங்களில் காணக் கிடைக்கிறது.
ஆளுநர். தலைவர்கள் இரங்கல்
சென்னை, டிச. 14: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு ஆளுநர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
சென்னை, ஈரோடு, டிச. 14: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (76) சென்னையில் சனிக்கிழமை காலமானார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் அஞ்சலி மனதில் பட்டதை பேசுபவர் என உருக்கம்
மனதில் பட்டதை பேசுபவர் என உருக்கம்
200 பேர் அரசு உதவி வழக்குரைஞர் பணித் தேர்வு எழுதாமல் திரும்பினர்
மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு உதவி வழக்குரைஞர் பணிக்கான முதல் நிலைத் தேர்வில் ஏற்பட்ட இணையக்கோளாறு காரணமாக சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் சனிக்கிழமை தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளுக்கான அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யக் கோரி மனு
மதுரை, டிச. 14: அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளுக்கான அங்கீகாரத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மாநில மொழிகளில் உயர்நீதிமன்ற நடைமுறைகள் எந்தளவுக்கு சாத்தியம்?
ஆங்கிலத்துக்கு கூடுதலாக மாநில மொழிகளில் உயர்நீதிமன்ற நடைமுறைகளை மேற்கொள்வது சாத்தியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏரிகளை தூர்வாரியதில் பல கோடி ரூபாய் முறைகேடு: தி.வேல்முருகன் குற்றச்சாட்டு
நெய்வேலி, டிச.14: கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம், பெருமாள் ஏரிகளை தூர்வாரியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் குற்றஞ்சாட்டினார்.
திருவண்ணாமலை: மண் சரிவு பகுதியில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு
திருவண்ணாமலை, டிச.14: திருவண்ணாமலை மகா தீப மலையில் மண் சரிந்து 7 பேர் உயிரிழந்த இடத்தை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (படம்).
பக்தர்கள் தரிசன அனுபவம் தெரிவிக்க கோயில்களில் மின்னணு பெட்டி
பக்தர்கள் தங்களது தரிசன அனுபவங்கள் குறித்த மதிப்பீடு, ஆலோசனைகளைத் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் முதல்கட்டமாக ஏழு திருக்கோயில்களில் மின்னணு ஆலோசனைப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறையில் ஆய்வாளருக்கு மிரட்டல்: இரு பெண் கைதிகள் மீது வழக்கு
புழல் சிறையில் ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்ததாக இரு பெண் கைதிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் சர்வதேச கருத்தரங்கு
பெரம்பலூர், டிச. 14: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 'ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி' மற்றும் துருக்கி சிர்ட் பல்கலைக்கழகம் சார்பில், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கான பயன்பாட்டு கணித அறிவியல் எனும் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
திருத்தணி,டிச.14: திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகைகள், ரூ.50,000 ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
மதுரை சிறையில் எழுதுபொருள்கள் உற்பத்திக்கு மூலப்பொருள்கள் வாங்கியதில் முறைகேடு: கடலூர் எஸ்.பி. உள்பட 11 பேர் மீது வழக்கு
மதுரை, டிச. 14: மதுரை மத்திய சிறையில் எழுதுபொருள்கள் உற்பத்திக்கு ரூ. 1.63 கோடியில் மூலப்பொருள்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கடலூர் மத்திய சிறை காவல் கண்காணிப்பாளர் எம். ஊர்மிளா உள்பட 11 பேர் மீது மதுரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்: 3 பேர் கைது
சென்னை, டிச. 14: சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.75 கோடி மதிப்புள்ள தங்கத்தைக் கடத்த முயன்ற ஊழியர் உள்பட 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
வட சென்னை வளர்ச்சி திட்டப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும்
அமைச்சர் சேகர்பாபு