கும்பகோணத்திலுள்ள குளங்கள், வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 44 குளங்கள், 11 வாய்க்கால்களிலுள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றும்படி 2018-ல் உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்புகள் கண்டிப்போடு அகற்றப்பட்டு, குளங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தன. அதே நேரம் சில நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றாமல் விட்டதால் அதைச் சுட்டிக்காட்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்தார் யானை ராஜேந்திரன்.
இந்த வழக்கு விசாரணையின்போது, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி டி.ஆர்.செந்தில்குமார் தாக்கல் செய்த அறிக்கையில்... 'ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கும்பகோணம் மாநகராட்சி கமிஷனர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. கடந்த டிசம்பர் 24-ல் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் கும்பகோணம் சப்-கலெக்டரும், மாநகராட்சி கமிஷனரும், நிதி நிறுவன ஆக்கிரமிப்புகள் மூன்று நாட்களுக்குள் அகற்றப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் கடந்த எட்டாம் தேதி வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கும்பகோணம் மாநகராட்சி கமிஷனர், ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்தத் தயங்குவது தெரிகிறது. எனவே கும்பகோணம் மாநகராட்சி கமிஷனருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அதுகுறித்து வரும் 27ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' எனக்கூறி, விசாரணையை 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.
This story is from the January 25-28,2025 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 25-28,2025 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சீமான் வீட்டில் உருட்டுக்கட்டை குண்டர்கள்! போராடிய பெரியாரிஸ்டுகள்!
“ஹலோ தலைவரே, தந்தை பெரியாரைத் தொடர்ந்து விமர்சித்துவரும் சீமானால் தமிழகம் முழுக்க ஒருவித பதட்டம் ஏற்பட்டு வருகிறது.”
"காலனி வீட்லதான் வசிக்கிறோம்” -எம்.எல்.ஏ. தோழர் சின்னத்துரை பேட்டி!
தமிழ்நாட்டில் 35 ஆண்டு களுக்கு முன்பு அரசாங்கம் கட்டிக் கொடுத்த, மேற்கூரை உடைந்து கொட் டும் காலனி வீட்டில் மிக எளிமையாக, எம்.எல்.ஏ.க்களிலேயே முன்னுதாரண மாக வாழ்ந்துவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கந்தர்வக் கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் மா.சின்னத்துரையை அவரது வீட்டில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்..
ஆம் ஆத்மியின்'ஜாட்' வியூகம்! தடுமாறும் பா.ஐ.க.!
ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் டெல்லி தேர்தல் வெற்றிக்காக வாள் சுழற்றத் தொடங்கியுள் ளன. டெல்லியின் தலைமை பீடத்தை அதிக முறை அலங்கரித்த கட்சி காங்கிரஸ் என்றாலும், ஆம் ஆத்மியின் வருகைக்குப் பின் காங்கிரஸ் டெல்லியில் வீழ்ச்சிப் பாதையில் இருக்கிறது. இழக்க எதுவுமில்லை என்பதால், கிடைத்த வரை ஆதாயம் என களத்தில் மும்முரம் காட்டுகிறது.
ட்ரம்ப் அதிரடி! பாதகமா? சாதகமா?
‘புலி வருது... புலி வருது' கதையாக... உண்மையிலேயே புலி வந்து விட்டது. ஆம்! அதிரடிக்குப் பெயர்போன டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக ஜனவரி 20, திங்கள்கிழமை மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, தனது அதிரடிகளை முதல் நாளிலேயே தொடங்கிவிட்டார்.
வாடகை பாக்கி மாநகராட்சியின் பலே பேனர் ஐடியா !
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு சொந்தமாக மத்திய பேருந்து நிலையத்திலுள்ள கடைகளில் அதிக வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் விவரத்தை பேருந்து நிலையத்தின் முன்பாக பேனராக வைத்து அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது மாநகராட்சி நிர்வாகம்!
இவளுக்கு மரண தண்டனை!அவனுக்கு ஆயுள் தண்டனை!-தீர்ப்பின் பின்னணி!
சமீபத்தில் வெளியான இரு தீர்ப்புகள் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளன. ஒரு வழக்கில், உயிருக்குயிராய் நேசித்த காதல னுக்கு கசாயத்தில் விஷம் கலந்துகொடுத்து கொலைசெய்த காதலிக்கு கேரள நீதிமன்றம் மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மாவலி பதில்கள்
'கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது... அதற்கு ஆதாரமும் உள்ளது' என்ற ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடியின் கருத்தில் மாவலிக்கு உடன்பாடு உண்டா?
விஷால் சென்டிமெண்ட்!
கௌதம்மேனன், அஜய் ஞானமுத்து, சுந்தர்.சி.ஆகியோருடன் அடுத்தடுத்து படம் பண்ண கமிட்டாகியுள்ளார் விஷால்.
திருப்பரங்குன்றம் தர்கா சிக்கல்!
நேர்த்திக் கடனுக்கு நெருக்கடி தரும் இந்து முன்னணி!