CATEGORIES
Categories
பிரதமர் முன்மொழிந்தவை வெற்றுத் தீர்மானங்கள்
புது தில்லி, டிச. 14: மக்களவை உரையில் பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த 11 தீர்மானங்களை 'வெற்றுத் தீர்மானங்கள்' என்று விமர்சித்த காங்கிரஸ், ஊழலில் சகிப்புத்தன்மை இல்லாத பாஜக, அதானி விவகாரம் குறித்து விவாதிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியது.
தமிழ் போன்ற தேன்!
கம்பனின் வியத்தகு தமிழ்க்காதல், காப்பியத்தின் பல இடங்களில் காணக் கிடைக்கிறது.
ஆளுநர். தலைவர்கள் இரங்கல்
சென்னை, டிச. 14: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு ஆளுநர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
சென்னை, ஈரோடு, டிச. 14: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (76) சென்னையில் சனிக்கிழமை காலமானார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் அஞ்சலி மனதில் பட்டதை பேசுபவர் என உருக்கம்
மனதில் பட்டதை பேசுபவர் என உருக்கம்
200 பேர் அரசு உதவி வழக்குரைஞர் பணித் தேர்வு எழுதாமல் திரும்பினர்
மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு உதவி வழக்குரைஞர் பணிக்கான முதல் நிலைத் தேர்வில் ஏற்பட்ட இணையக்கோளாறு காரணமாக சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் சனிக்கிழமை தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளுக்கான அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யக் கோரி மனு
மதுரை, டிச. 14: அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளுக்கான அங்கீகாரத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மாநில மொழிகளில் உயர்நீதிமன்ற நடைமுறைகள் எந்தளவுக்கு சாத்தியம்?
ஆங்கிலத்துக்கு கூடுதலாக மாநில மொழிகளில் உயர்நீதிமன்ற நடைமுறைகளை மேற்கொள்வது சாத்தியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏரிகளை தூர்வாரியதில் பல கோடி ரூபாய் முறைகேடு: தி.வேல்முருகன் குற்றச்சாட்டு
நெய்வேலி, டிச.14: கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம், பெருமாள் ஏரிகளை தூர்வாரியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் குற்றஞ்சாட்டினார்.
திருவண்ணாமலை: மண் சரிவு பகுதியில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு
திருவண்ணாமலை, டிச.14: திருவண்ணாமலை மகா தீப மலையில் மண் சரிந்து 7 பேர் உயிரிழந்த இடத்தை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (படம்).
பக்தர்கள் தரிசன அனுபவம் தெரிவிக்க கோயில்களில் மின்னணு பெட்டி
பக்தர்கள் தங்களது தரிசன அனுபவங்கள் குறித்த மதிப்பீடு, ஆலோசனைகளைத் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் முதல்கட்டமாக ஏழு திருக்கோயில்களில் மின்னணு ஆலோசனைப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறையில் ஆய்வாளருக்கு மிரட்டல்: இரு பெண் கைதிகள் மீது வழக்கு
புழல் சிறையில் ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்ததாக இரு பெண் கைதிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் சர்வதேச கருத்தரங்கு
பெரம்பலூர், டிச. 14: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 'ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி' மற்றும் துருக்கி சிர்ட் பல்கலைக்கழகம் சார்பில், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கான பயன்பாட்டு கணித அறிவியல் எனும் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
திருத்தணி,டிச.14: திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகைகள், ரூ.50,000 ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
மதுரை சிறையில் எழுதுபொருள்கள் உற்பத்திக்கு மூலப்பொருள்கள் வாங்கியதில் முறைகேடு: கடலூர் எஸ்.பி. உள்பட 11 பேர் மீது வழக்கு
மதுரை, டிச. 14: மதுரை மத்திய சிறையில் எழுதுபொருள்கள் உற்பத்திக்கு ரூ. 1.63 கோடியில் மூலப்பொருள்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கடலூர் மத்திய சிறை காவல் கண்காணிப்பாளர் எம். ஊர்மிளா உள்பட 11 பேர் மீது மதுரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்: 3 பேர் கைது
சென்னை, டிச. 14: சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.75 கோடி மதிப்புள்ள தங்கத்தைக் கடத்த முயன்ற ஊழியர் உள்பட 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
வட சென்னை வளர்ச்சி திட்டப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும்
அமைச்சர் சேகர்பாபு
கார்த்திகை பெளர்ணமி: ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் வெள்ளிக்கவசம் திறப்பு
திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் வெள்ளிக்கவசம் திறக்கப்பட்ட நிலையில் ஸ்ரீ ஆதிபுரீஸ்வரரை தரிசிக்க சனிக்கிழமை வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
சமூக வலைதளங்களைப் பார்த்து பிரசவம் பார்க்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும்
வீட்டிலேயே பிரசவம் பார்க்கும்போது அசம்பாவிதம் ஏற்பட்டால், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, சமூக வலைதளங்களைப் பார்த்து பிரசவம் பார்க்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வலியுறுத்தியுள்ளார்.
திருச்செந்தூரில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
திருச்செந்தூர் கோயில் கடலில் குளிக்கவும், கடற்கரையில் தங்குவதற்கும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 10 முதல் 19 வரை வைகுண்ட வாயில் தரிசனம்
திருப்பதி, டிச.14: ஏழுமலையான் கோயிலின் முக்கியமான திருவிழாவான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 2025, ஜனவரி 10 முதல் 19 வரை துவார தரிசனத்திற்கான விரிவான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு 6,000 கன அடியாக அதிகரிப்பு
ஸ்ரீபெரும்புதூர், டிச. 14: ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வெளியேறும் உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்து கொண்டிருப்பதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரின் அளவு சனிக்கிழமை 6,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
ஜன.10-க்குள் 1.77 கோடி குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலை அமைச்சர் காந்தி
வேலூர், டிச.14: பொங்கல் பண்டிகைக்காக 1.77 கோடி குடும்பங்களுக்கு காலதாமதமின்றி ஜன. 10-ஆம் தேதிக்குள் இலவச வேட்டி, சேலைகள் விநியோகம் செய்யப்படும் என கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
அரசமைப்புச் சட்டம் மீது காங்கிரஸால்தான் தாக்குதல் - மக்களவையில் பிரதமர் மோடி
‘‘அரசியலமைப்பை உருவாக்கியவர்களும், உச்ச நீதிமன்றமும் பலமுறை வலியுறுத்தியபடி, மதச்சார்பற்ற பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பாடுபடுகிறோம்’’ என மக்களவையில் அரசியலமைப்பு சிறப்பு விவாதத்தில் பிரதமர் மோடி பதிலளித்து பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 329 ஏரிகள் நிரம்பின
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் 1821.40 மி.மீட்டர் மழை பெய்த நிலையில், பொதுப்பணித் துறை ஏரிகள் - 119, ஊரக வளர்ச்சி முகமை பராமரிப்பில் உள்ள 210 ஏரிகள் என மொத்தம் 329 ஏரிகள் நிரம்பின.
மழை வெள்ளத்தில் தென் மாவட்டங்கள்
நெல்லை தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு திருச்சியில் குடியிருப்புகளை சூழ்ந்தது மழைநீர்
நவம்பரில் குறைந்த சில்லறை பணவீக்கம்
முந்தைய அக்டோபர் மாதத்தில் 14 மாதங்கள் காணாத அளவுக்கு 6.21 சதவீதமாக உயர்ந்த நாட்டின் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம், கடந்த நவம்பரில் 5.48 சதவீதமாகக் குறைந்துள்ளது.
சரிந்து மீண்டது பங்குச்சந்தை சென்செக்ஸ் 843 புள்ளிகள் உயர்வு
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை சரிந்து மீண்டது.
விலை உயரும் டாடா வர்த்தக வாகனங்கள்
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகன விலை வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
ரஷியாவை தாக்க அமெரிக்க ஆயுதங்கள்: டிரம்ப் எதிர்ப்பு
உக்ரைனுக்கு தங்கள் நாடு வழங்கியுள்ள ஏவுகணைகளை ரஷியா மீது வீச ஜோ பைடன் தலைமையிலான அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.