CATEGORIES
Categories
மீண்டும் ரூ.58 ஆயிரத்தைக் கடந்தது தங்கம்: 3 நாள்களில் பவுனுக்கு ரூ.1,200 உயர்வு
சென்னையில் தங்கம் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,080-க்கு விற்பனையானது.
லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்
இந்தியா கடும் கண்டனம்
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் உள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும் வேலூர் எம்.பி.யுமான டி.எம்.கதிர்ஆனந்த் வீடு உள்பட தொடர்புடைய 4 இடங்களில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
‘அமெரிக்க கார் தாக்குதலில் பலருக்குத் தொடர்பு'
அமெரிக்க காவின் லூசியானா மாகாணம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்தினர் மீது காரை ஏற்றி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்குத் தொடர்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கதேசம்: வரலாற்று பாடநூல்களில் முஜிபுர் ரஹ்மானுக்கு முக்கியத்துவம் குறைப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டவர் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் என்பதை நீக்கிவிட்டு, அவரிடம் தளபதியாக இருந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் கணவர் ஜியாவுர் ரஹ்மான்தான் அதைச் செய்ததாக பாடநூல்களில் இடைக்கால அரசு மாற்றம் செய்துள்ளது.
ம.பி. போஜ்சாலா வழக்கையும் விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம்
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் தவிர, மத்திய பிரதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் உரிமை கோரும் போஜ் சாலா தொடர்பான வழக்கையும் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றது.
தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?
ஆஸ்திரேலியாவுடனான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்
4 பேருக்கு 'கேல் ரத்னா'; 32 பேருக்கு 'அர்ஜுனா'
விளையாட்டுத் துறை விருதுகளை அறிவித்தது மத்திய அரசு
முதலீட்டுத் திட்டத்தின் பெயரில் பணம் பறிக்கும் புதிய இணைய மோசடி
நாட்டின் வேலையில்லாத இளைஞர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள் மற்றும் நிதித்தேவையுள்ள நபர்களை குறிவைத்து முதலீட்டுத் திட்டத்தின் பெயரில் பணம் பறிக்கும் புதிய இணையவழி (சைபர்) மோசடி வெளிவந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் என்னை சிக்கவைக்க பாஜக முயற்சி
கர்நாடக அமைச்சர் பிரியாங்க் கார்கே
ஊடுருவல்காரர்கள் இந்தியாவினுள் நுழைய அனுமதிக்கும் பிஎஸ்எஃப்: மம்தா
'ஊடுருவல்காரர்கள் இந்தியாவினுள் நுழைய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களே அனுமதித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
இலங்கை காரைநகர் படகுத் துறையை மேம்படுத்த இந்தியா ரூ.8.5 கோடி நிதியுதவி
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காரைநகர் படகுத் துறை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்துக்கு இந்தியா சார்பில் ரூ.8.5 கோடி (இலங்கை ரூபாயில் 29 கோடி) வழங்கப்படவுள்ளது.
ஃபேஸ்புக் காதலியை கரம்பிடிக்கச் சென்று பாகிஸ்தான் சிறையில் சிக்கிய உ.பி. இளைஞர்!
ஃபேஸ்புக் காதலியைக் கரம்பிடிக்க பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த உத்தர பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்த 20 வயதான பாதல் பாபு அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புஷ்பா 2 விவகாரம்: ஹைதராபாத் டிஜிபி அறிக்கை சமர்ப்பிக்க என்எச்ஆர்சி உத்தரவு
தெலங்கானா வில் புஷ்பா-2 திரைப்பட சிறப்புக் காட்சியின்போது பெண் உயிரி ழந்த விவகாரத்தில், நான்கு வாரங் களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஹைதராபாத் காவல் துறை தலைமை இயக் குநருக்கு (டிஜிபி) தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச் ஆர்சி) உத்தரவிட்டது.
தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் பஞ்சாப் அரசு: உச்சநீதிமன்றம் காட்டம்
விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜீத் சிங் தலேவாலின் காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மீது தவறான பிம்பத்தை பஞ்சாப் மாநில அரசும், சில விவசாயிகள் சங்கத் தலைவர்களும் ஏற்படுத்தி வருகின்றனர் என்று உச்சநீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.
பிகார்: அரசு தேர்வை ரத்து செய்யக் கோரி பிரசாந்த் கிஷோர் காலவரையற்ற உண்ணாவிரதம்
பிகாரில் வினாத்தாள் கசிந்ததாக குற்றஞ்சாட்டப்படும் அரசுப் பணியாளர் தேர்வை ரத்து செய்யக் கோரி ஜன சுராஜ் கட்சித் தலைவரும் முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினார்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டியது 370-ஆவது பிரிவு: அமித் ஷா
‘அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் தூண்டியது. அப்பிரிவை நீக்கியதன் மூலம் பயங்கரவாதத்துக்கு மட்டுமன்றி பயங்கரவாத ஆதரவு சூழலுக்கும் முடிவுகட்டியது பிரதமர் மோடி அரசு’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
40 ஆண்டுகளுக்குப் பின் போபால் ஆலையில் நச்சுக் கழிவுகள் அகற்றம்
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-ஆம் ஆண்டில் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின் நச்சுக் கழிவுகள் புதன்கிழமை (ஜன. 1) இரவு அப்புறப்படுத்தப்பட்டன.
துணைவேந்தர்கள் நியமன விவகாரம்: ஆளுநரும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும்
பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆளுநரும் மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பள்ளிப் படிப்பில் இடைநிற்றல் இல்லை
மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தகவல்
அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுக்கவில்லை
அரசுப் பள்ளிகளைத் தனியாருக்கு தத்துக் கொடுக்கவும் இல்லை; தாரை வார்க்கவும் இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் தமிழகம் முன்னேற்றம்
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கைகளில் தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மனதில் உறுதி வேண்டும்
நீச்சல் அடிக்கத் தெரிந்தவர்கள் ஆற்றுக்குள் போய் வரலாம். ஆனால், வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடிக்கும் திறன் இருந்தால், வரலாற்றில்கூட இடம்பெறலாம்.
‘அவனியாபுரத்தில் நிரந்தர ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைக்க அரசு தயார்’
அவனியாபுரத்தில் அனைத்துக் குழுக்களும் ஒருங்கிணைந்து ஒருமித்த கருத்துடன் செயல்பட்டால் நிரந்தர ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைப்பதற்கு அரசு தயாராக உள்ளது என வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.
தமிழகத்தில் காசநோய் அச்சுறுத்தலில் 2.16 கோடி பேர்!
தமிழகத்தில் காசநோய் அச்சுறுத்தலில் 2.16 கோடி பேர் இருப்பது மக்கள் நல்வாழ்வுத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அனுமதியின்றி நடத்தினால் நடவடிக்கை
உரிய அனுமதியின்றி முதுநிலை மருத்துவப் படிப்புகளை நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என் எம்சி) எச்சரித்துள்ளது.
மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடநூல்கள் விநியோகம்
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான விலையில்லா பாட நூல்கள் விநியோகிக்கப்பட்டன.
விவசாயிகளுக்கு வேளாண் தகவல்கள்: மத்திய அமைச்சகம்-சென்னை ஐஐடி ஒப்பந்தம்
வேளாண்மை மற்றும் அது சார்ந்த தொழில்கள் தொடர்பான புதிய சலுகைகள், திறன்கள், சேவைகள், தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகள் அறிந்துகொள்ளும் வகையில் மத்திய வேளாண் அமைச்சகத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மழையால் 12,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் சேதம்
மன்னார்குடி சுற்றுப்புற பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழையால் பால் கட்டும் பருவத்தில் இருந்த 12 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் நோக்கம் நிறைவேறாது
பல்கலைக்கழகங்களில் காலியாகவுள்ள துணைவேந்தர் பதவிகள் நியமனத்தில் ஆளுநரின் நோக்கம் நிறைவேறாது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.