CATEGORIES
Categories
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு நிர்ப்பந்தம்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் நிலவிக்கொண்டிருக்கும் புயல் சின்னம் தமிழக கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால், தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் ஆஜர்
இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பான விசாரணைக்காக தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை நேரில் ஆஜராகினர்.
84 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி ஆணை
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம் சரிவு
விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான பணவீக்கம் கடந்த நவம்பரில் முறையே 5.35 சதவீதம் மற்றும் 47 சதவீதமாக சரிந்துள்ளது.
சரக்குப் போக்குவரத்து தீர்வு அளிக்கும் ‘ஆல்கார்கோ காடி'
திருப்பூ ரின் பிரபல ஆடை தயாரிப்பு சரக்குகளைக் முன்னணி நிறுவனங்களின் கையாள்வதில் யோகச் சங்கிலி மேலாண்மை விரைவு விநியோகம் மற்றும் விநி நிறுவனங்களில் ஒன்றான ஆல் கார்கோ காடி நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
'தென்னிந்தியாவின் வர்த்தக நுழைவு மையமாக வ.உ.சி. துறைமுகம் திகழும்'
தென்னிந்தியா வின் வர்த்தக நுழைவு மையமாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசந்தகுமார் புரோஹித்
2025-ஆம் ஆண்டுக்கான புதிய ஹோண்டா எஸ்பி125 அறிமுகம்
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது புகழ் பெற்ற எஸ்பி125 பைக்கின் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரஷியாவுக்கு மேலும் வீரர்களை அனுப்ப வட கொரியா ஆயத்தம்: தென் கொரியா
ரஷியாவுக்கு மேலும் ராணுவ வீரர்களை அனுப்ப வட கொரியா தயாராகி வருவதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது.
37 பேருக்கான மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு
ஜோ பைடன் அறிவிப்பு
கிறிஸ்துமஸ் சந்தை கார் தாக்குதல் குறித்து ஜெர்மனிக்கு முன்கூட்டியே எச்சரிக்கை
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் கார் தாக்குதல் நடத்திய தலீப் அல்-அப்துல்மோசன் குறித்து ஜெர்மனியிடம் முன்கூட்டியே தாங்கள் எச்சரித்ததாகவும் அதை அந்த நாட்டு அதிகாரிகள் அலட்சியம் செய்து விட்டதாகவும் சவூதி அரேபிய வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்செக்ஸ் 499 புள்ளிகள் உயர்வு
5 நாள் தொடர் சரிவுக்கு முடிவு
டேபிள் டென்னிஸ்
இந்திய பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து - தொழிலதிபர் வெங்கட தத்தா சாய் ஆகியோரின் திருமணம், ராஜஸ்தானின் உதய்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
'பும்ராவை எதிர்கொள்ளத் தயார்'
இந்தியாவின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவின் பௌலிங்கை எதிர்கொள்ளத் தகுந்த திட்டத்துடன் தயார்நிலையில் இருப்பதாக, ஆஸ்திரேலிய இளம் பேட்டர் சாம் கான்ஸ்டஸ் திங்கள்கிழமை கூறினார்.
அஸ்வினுக்கு பதில் தனுஷ்கோடியான்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதை அடுத்து, ஆஸ்திரேலியாவிலுள்ள இந்திய அணியில், அவரது இடத்தில் மும்பை ஆஃப் ஸ்பின்னரான தனுஷ்கோடியான் சேர்க்கப்பட்டுள்ளார்.
தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால்: திண்டுக்கல்லில் தொடக்கம்
43-ஆவது தேசிய அளவிலான ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டி திண்டுக்கல்லில் திங்கள்கிழமை தொடங்கியது.
உ.பி.: 32 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கோயில் மீண்டும் திறப்பு
உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் கலவரத்தால் கடந்த 1992-ஆம் ஆண்டு மூடப்பட்ட சிவன் கோயில் திங்கள்கிழமை (டிச.23) மீண்டும் திறக்கப்பட்டது.
பெங்களூரு மாணவர்கள் சிறப்பிடம்
தென்மேற்கு மண்டல பல்கலை. நீச்சல்
மின் கட்டணம்; திரிபுராவுக்கு வங்கதேசம் ரூ.200 கோடி நிலுவை
திரிபுராவுக்கு வங்கதேசம் ரூ.200 கோடி மின் கட்டண நிலுவை வைத்துள்ளதாக மாநில முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்தார்.
அல்லு அர்ஜுனுக்கு காவல் துறை சம்மன்: இன்று மீண்டும் விசாரணை
புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு காவல் துறை திங்கள்கிழமை சம்மன் அனுப்பியது.
அரசுத் தேர்வு விண்ணப்பங்களுக்கு ஜிஎஸ்டி: மத்திய அரசு மீது பிரியங்கா சாடல்
அரசுத் தேர்வு விண்ணப்பங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதித்து மக்களின் கனவுகளை மத்திய அரசு வருமானமாக மாற்றியுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வன்மையாக சாடியுள்ளார்.
எம்.பி.க்கள் தள்ளுமுள்ளு: பாதுகாப்பில் குறைபாடில்லை
'நாடாளுமன்ற வளாகத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடத்திய போட்டிப் போராட்டத்தில் மோதல் ஏற்பட்ட விவகாரத்தில் எங்கள் பாதுகாப்புப் பணியில் எந்தக் குறைபாடும் இல்லை' என்று மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) திங்கள்கிழமை விளக்கமளித்தது.
முன்னாள் பிரதமர் சரண் சிங் பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை
மறைந்த முன்னாள் பிரதமர் சௌதரி சரண் சிங்கின் 122-ஆவது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு திங்கள்கிழமை மரியாதை செலுத்தினார்.
உடலுறுப்பு தான விழிப்புணர்வில் மருத்துவர்கள் பங்கு முக்கியம்
`உடலுறுப்பு தானம் செய்வதில் பொதுமக்களிடையே தயக்கம் இருப்பதை சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, இது பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துவதில் மருத்துவா்கள் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று வலியுறுத்தினாா்.
ஜெர்மனி: கார் தாக்குதல் சம்பவத்தில் 7 இந்தியர்கள் காயம்
ஜெர்மனியில் கடந்த வாரம் கிறிஸ்துமஸ் சந்தையில் நடத்தப்பட்ட கார் தாக்குதலில் 7 இந்தியர்கள் காயமடைந்ததாகவும் அவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் அங்குள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் (90) மறைவு
பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் (90) திங்கள்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தனர்.
ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணி
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாட்டின் இளைஞர்களுக்கு சுமார் 10 லட்சம் நிரந்தர அரசுப் பணியை மத்திய அரசு வழங்கியுள்ளது; இது முன்னெப்போதும் இல்லாத சாதனை என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
தேடப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதிகள் மூவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
காவல்நிலையத்தின் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்திய வழக்கில் தேடப்பட்ட 3 ‘காலிஸ்தான்’ ஆதரவு பயங்கரவாதிகள் திங்கள்கிழமை அதிகாலை உத்தர பிரதேசத்தின் பிலிபிட்டில் காவல்துறையினருடன் நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அரசு ஊழியர்களின் சொத்துகள், கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல
அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அந்த தகவல்களை வழங்க மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்திய வர்த்தக அந்தஸ்து ரத்தால் இஎஃப்டிஏ ஒப்பந்தம் அமல் தாமதமாகாது
வர்த்தகத்தில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட ‘மிகுந்த விருப்பத்துக்குரிய நாடு’ அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) ஒப்பந்தத்தை அமல்படுத்துவது தாமதமாகாது என்று ஸ்விட்சர்லாந்து தெரிவித்தது.