CATEGORIES
Categories
தென்மேற்கு மண்டல பல்கலை. நீச்சல் போட்டி
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் ஐஎஸ்டியில் தென் மேற்கு மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவர், மகளிர் நீச்சல் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.
மும்பைக்கு ஏற்றம்: சென்னைக்கு ஏமாற்றம்
ஐஎஸ்எல் கால்பந்து சூப்பர் லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி 0-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சியிடம் வீழ்ந்தது.
மிதுன் மஞ்சுநாத், சௌரவ் வர்மா முன்னேற்றம்
தேசிய சீனியர் பாட்மின்டன் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் மிதுன் மஞ்சுநாத், சௌரவ் வர்மா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
மே.இந்திய தீவுகளுடன் ஒருநாள் தொடரிலும் வெற்றியைத் தொடர இந்திய மகளிர் மும்முரம்
மே.இந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் வெற்றியைத் தொடர இந்திய அணி மும்முரமாக உள்ளது.
அமித் ஷாவைக் கண்டித்து காங்கிரஸ் ஒரு வாரகால போராட்டம்
நாடாளுமன்றத்தில் சட்டமேதை அம்பேத்கரை அவமதித்துப் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் கண்டித்து ஒரு வாரகால போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அமித் ஷாவுக்கு எதிராக டிச.24-இல் நாடு தழுவிய போராட்டம் - மாயாவதி அறிவிப்பு
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்புக் கேட்காவிட்டால், நாடு முழுவதும் டிச.24-ஆம் தேதி அவருக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என்று அக்கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
தேர்தல் மின்னணு ஆவணங்களை பெற விதி மாற்றம்: காங்கிரஸ் கண்டனம்
தேர்தல்தொடர்பான மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் பெற கட்டுப்பாடு விதிக்கும் நோக்கில், அதுதொடர்பான விதிமுறையில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
15,000 ஏக்கர் ஜமீன் நிலங்கள்: கையகப்படுத்துகிறது பிகார் அரசு
பிகாரில் 'பெட்டியா ராஜ்' ஜமீன் சொத்துக்களில் சுமார் 15,358 ஏக்கர் நிலங்களை முழுமையாக கையகப்படுத்தவதற்கான அறிவிக்கையை மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்டது.
கேரளம்: வகுப்பறையில் மாணவியை கடித்த பாம்பு - விசாரணைக்கு அரசு உத்தரவு
கேரளத்தில் அரசு உதவி பெறும் பள்ளியொன்றில் 7-ஆம் வகுப்பு மாணவியை பாம்பு கடித்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐ.நா. சர்வதேச நீதி கவுன்சிலின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகுர் நியமனம்
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகுர் ஐ.நா. வின் சர்வதேச நீதி கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பாஜக எம்எல்ஏ உள்பட 16 பேர் மீது வழக்குப் பதிவு
சிறப்பு நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம், படாயுன் மாவட்டத்தின் பில்சி தொகுதி பாஜக எம்எல்ஏ ஹரிஷ் ஷக்யா, அவரது உறவினர்கள் உள்பட 16 பேர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கை அமலாகாதது வருத்தமளிக்கிறது
'சில மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; அதை அமல்படுத்தக்கோரி சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் அழுத்தம் தராமல் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது' என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சனிக்கிழமை தெரிவித்தார்.
முழு அரசு மரியாதையுடன் ஓம் பிரகாஷ் சௌதாலா உடல் தகனம்
மறைந்த ஹரியாணா முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலாவின் உடல், முழு அரசு மரியாதையுடன் சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
ராஜஸ்தான்: எரிவாயு லாரி விபத்தில் உயிரிழப்பு 14–ஆக உயர்வு
ராஜஸ்தானில் ஜெய்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் எரிவாயு டேங்கர் லாரி மற்றொரு லாரியுடன் மோதி ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை சனிக்கிழமை 14-ஆக உயர்ந்தது.
இந்திய தொழிலதிபர் ரவி பிள்ளைக்கு பஹ்ரைனின் உயரிய விருது
இந்திய தொழிலதிபர் ரவி பிள்ளைக்கு பஹ்ரைன் நாட்டின் உயரிய விருதான 'மெடல் ஆஃப் எஃபிஷியன்ஷி' வழங்கப்பட்டது.
ஐ.நா.வில் முதலாவது உலக தியான தினம்
முதலாவது உலக தியான தினம் நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வின் தலைமையகத்தில் சனிக்கிழமை (டிச. 21) கடைப்பிடிக்கப்பட்டது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை சேர்க்க ரஷியா ஆதரவு
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா சேர வதற்கு ஆதரவளிப்பதாக ரஷியா உறுதிபட தெரிவித்துள்ளது.
மும்பை படகு விபத்து
7 வயது சிறுவன் உடல் மீட்பு; உயிரிழப்பு 15-ஆக அதிகரிப்பு
காவல்துறை அனுமதி மறுத்தும் அத்துமீறி திரையரங்கம் சென்ற அல்லு அர்ஜுன்
புஷ்பா-2 திரைப்படத்தின் முதல்நாள் வெளியீட்டின்போது காவல்துறை அனுமதி மறுத்தும் நடிகர் அல்லு அர்ஜுன், திரையரங்குக்கு அத்துமீறி சென்றதாக தெலங்கானா சட்டப்பேரவையில் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டினார்.
உள்நாட்டில் 40 கோடி பேர் புலம்பெயர்வு: 12% சரிவு
உள்நாட்டில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 40.2 கோடியாக சுமார் 12 சதவீதம் சரிந்துள்ளது.
பஞ்சாப்: அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து
5 பேரை மீட்கும் பணி தீவிரம்
மாநிலங்களவையில் 30% நேரம் பேசிய தன்கர்
திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
பரஸ்பர நம்பிக்கையே திருமண உறவின் அடித்தளம்
விவாகரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
மின் விபத்தில் உயிரிழப்பு நிவாரணம் ரூ. 10 லட்சமாக உயர்வு
பொது இடங்களில் மின் விபத்துகளால் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக மின்வாரியம் உயர்த்தியுள்ளது.
தமிழகத்தின் உரிமைகள்: மத்திய அரசுக்கு மக்கள் மீண்டும் பதிலடி கொடுப்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு தராவிட்டால், தமிழக மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பர் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான மறு ஆய்வு மனு தள்ளுபடி
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்தியாவின் திறன்மிகு பணியாளர்களுக்கு உலகெங்கிலும் வாய்ப்பு
இந்தியாவின் திறன்மிகு பணியாளர்களுக்கு உலகின் பல்வேறு நாடுகள் வாயில் கதவைத் திறந்துள்ளன. அந்த நாடுகளில் இந்தியப் பணியாளர்களின் நலனை உறுதி செய்யும் ஒப்பந்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
2-ஆம் கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம்: ரூ. 7,955 கோடியில் விரைவில் தொடங்கப்படும்
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூ. 7,955.37 கோடியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் 2-ஆம் கட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கிவைப்பார் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 26,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்
சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு ரூ. 26,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்ச் சமூகத்திற்கே விருது!
ரதியியல், வ.உ.சி. இயல், புது இயல் ஆகிய களங்களில் தனித்தன்மை கொண்ட வகையிலும் முன்னோடி நிலையிலும் அரும்பணிகளை ஆற்றிய ஆளுமைகளுள் தனித்துக் குறிப்பிடத்தக்கவர் ஆ.இரா. வேங்கடாசலபதி.