CATEGORIES
Categories
சூலையின் திருக்கு!
கம்பனின் தமிழமுதம் - 24
திமுகவின் ஒரு பிரிவாக காவல் துறை செயல்படுகிறது
திமுகவின் ஒரு பிரிவாக காவல் துறை செயல்படுகிறது என்று பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
விவசாயிகளை திரட்டி சென்னையில் விரைவில் முற்றுகைப் போராட்டம்
ராமதாஸ் அறிவிப்பு
நெல்லை நீதிமன்றம் அருகில் கொலை கவனக்குறைவாக இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தின் போது, பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க நெல்லை காவல் துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடியக்கரை அருகே 3 மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அருகே கடலில் 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த 3 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செந்தூர் எக்ஸ்பிரஸ் பேரழிவை தடுத்த ரயில்வே அதிகாரி, 8 பேருக்கு ரயில் சேவைக்கான மிக உயரிய விருது
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக் கிய செந்தூர் எக்ஸ்பிரஸை பேரழிவிலிருந்து தடுத்த ரயில்வே அதிகாரி உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 9 பேருக்கு ரயில் சேவைக்கான மிக உயரிய விருதான அதி விஷிஷ்ட ரயில் சேவை விருதை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை வழங்கினார்.
பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரம்: ஆளுநரின் விருப்பப்படி செயல்பட முடியாது சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேடுதல் குழு விவகாரத்தில் சட்டவிதிகளின் படி நடக்கலாமே தவிர ஆளுநர் விருப்பப்படி எல்லாம் செய்ய முடியாது என்று மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.
ஜாபர் சாதிக் வழக்கில் நீதிபதி விலகல்
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
புகழ்பாடும் மன்றமாக பேரவை மாறிவிட்டது: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவை புகழ்பாடும் மன்றமாக மாறிவிட்டது என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் கொள்கையில் உறுதியாக இருப்போம்: இபிஎஸ்
சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் கொள்கையில் எப்போதும் உறுதியாக இருப்போம் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
வெள்ள பாதிப்புக்கு திமுக அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம்
விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார்.
மணல் கடத்தலை தடுத்த கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் மணல் கடத்தலை தடுத்த கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து, லாரியை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
ஒன்றரை வயது குழந்தை கழுத்தறுத்துக் கொலை
தாய் தற்கொலை முயற்சி
குப்பைத் தொட்டியில் பெண் குழந்தை சடலம் மீட்பு
சென்னை ஆதம்பாக்கத்தில் குப்பைத் தொட்டியில் கிடந்த பெண் குழந்தை சடலம் மீட்கப்பட்டது.
அரசுப் பொறியாளர்களிடம் சேவை மனப்பான்மை உருவாக வேண்டும்
அரசுப் பொறியாளர்களிடையே ஒருமித்த மனப்பான்மையும், சேவை மனப்பான்மை உருவாக வேண்டும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணமிழப்பு: இளைஞர் தற்கொலை
சென்னை சின்னமலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
விசிக, இடதுசாரிகளுடன்தான் பயணிக்கும் - தொல்.திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி இயக்கங்களுடன்தான் பயணிக்கும் என அதன் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றவில்லை: தாம்பரம் ஆணையர்
தாம்பரம் மாநகராட்சியில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் எவரும் இல்லை என அந்த மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தெரிவித்தார்.
விமானத்தில் இயந்திரக் கோளாறு: ஓடு பாதையில் நிறுத்தம்
சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக ஓடு பாதையில் நிறுத்தப்பட்டது.
ரூ. 120 கோடியில் 220 திருக்குளங்கள் சீரமைக்கும் பணி - அமைச்சர் சேகர்பாபு
கருங்கல் கட்டுமானத்துக்கு ரூ. 1.50 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு, மாநில வல்லுநர் குழு மற்றும் தொல்லியல் குழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2026 ஜனவரி மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
'தமிழ் சேவா' விருது வழங்கும் திட்டம் தொடக்கம்
ராஜஸ்தானி தமிழ்நாடு சங்கம் சார்பில் 'தமிழ் சேவா' விருது வழங்கும் திட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் தொடங்கி வைத்தார்.
ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனர்.
சென்னை கலங்கரை விளக்கத்தில் புதிய ரேடார் ஆண்டனா
சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்த பழுதடைந்த பழைய ரேடார் ஆண்டனாவை மாற்றி புதிய ரேடார் ஆண்டனா பொருத்தப்பட்டது.
மார்ச் மாத ஆன்லைன் கோட்டா வெளியீட்டில் திருத்தங்கள்
ஜனவரி 2025, 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள வைகுண்ட ஏகாதசி வைகுண்ட துவார தரிசனத்திற்கான ஸ்ரீவாணி மற்றும் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகளின் ஆன்லைன் ஒதுக்கீட்டை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளதால், மார்ச் மாத ஆன்லைன் கோட்டா டிக்கெட்டுகளின் வெளியீட்டு தேதிகளில் மாற்றங்களை தேவஸ்தானம் செய்துள்ளது.
3 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு: ஜன.2 முதல் நடைபெறும்
விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழுமையாக ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு ஜன.2 முதல் நடைபெறவுள்ளது.
கடும் பனிப்பொழிவால் விளைச்சல் பாதிப்பு: மல்லிகைப் பூ கிலோ ரூ.2,250-ஆக உயர்வு
கடும் பனிப்பொழிவு காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப் பூ விலை பல மடங்கு உயர்ந்து சனிக்கிழமை கிலோ ரூ. 2,250-க்கு விற்பனையானது.
செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஜிஎஸ்டி குறைப்பு
செறிவூட்டப்பட்ட அரிசி வித்துகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் சனிக்கிழமை வழங்கியது.
கிறிஸ்துமஸ்: கன்னியாகுமரி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
கிறிஸ்துமஸை முன்னிட்டு சென்னையிலிருந்து கன்னியாகுமரி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
கோயில்களில் பயன்பாடின்றி உள்ள 1,000 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு
தமிழக கோயில்களில் பயன்பாடின்றி உள்ள 1,000 கிலோ எடையுள்ள தங்கத்தை வங்கியில் முதலீடு செய்து, ஆண்டுக்கு ரூ.12 கோடி வட்டியாகப் பெற இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்து வருவதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்