CATEGORIES
Categories
தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டங்கள் தோல்வி
தமிழகத்தில் நீர் மேலாண்மைத் திட்டங்கள் தோல்வியடைந்ததால்தான் மழை நீர் நேரடியாகக் கடலில் சென்று கலக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
‘தென் தமிழகத்துக்கு நீதிமன்ற அனுமதியின்படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்’
தென் தமிழகத்துக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை, ஏற்கெனவே அனுமதித்த படி கோயம்பேடு பணிமனை மற்றும் போரூர் சுங்கச்சாவடியிலிருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புயல் நிவாரணம்: விசிக ரூ.10 லட்சம் நிதி
ஃபென்ஜால் புயல்பாதிப்பை எதிர்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள், பயணிகளிடையே மோதல்
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கும், இலங்கைப் பயணிகளுக்குமிடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிறப்பு முகாமில் 10,000 பேருக்கு மருத்துவப் பரிசோதனை
சென்னை சைதாப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
மாணவி பாலியல் வன்கொடுமை:
2 மாணவர்கள் கைது
'ஆபரேஷன் திரைநீக்கு' நடவடிக்கை: இணையவழியில் மோசடி செய்த 70 பேர் கைது
தமிழகத்தில் இணையவழியில் மோசடி செய்த சுமார் 70 பேரை 'ஆபரேஷன் திரைநீக்கு' நடவடிக்கை மூலம் போலீஸார் கைது செய்தனர்.
திருவேற்காட்டில் ரூ.3 கோடியில் புதிய சாலைப் பணி
திருவேற்காட்டில் ரூ.3 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணியை அமைச்சர் சா.மு. நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
விஸ்வகர்மா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
இலங்கை கடற்படையினரால் மண்டபம் மீனவர்கள் 8 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினர் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர். மேலும், 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
72 சதவீதம் நிரம்பிய சென்னை குடிநீர் ஏரிகள்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் 72.88 சதவீதம் நீர் நிரம்பியது.
விருகம்பாக்கம் கால்வாய் பாலங்களை உயர்த்த திட்டம்! மாநகராட்சி
விருகம்பாக்கம் கால்வாயின் அரும்பாக்கம் குறுக்கே உள்ள 12 பாலங்களை உயர்த்திக் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சிறப்பு மொத்த விற்பனையாளர்களை நியமிக்க ஆவின் திட்டம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் தயிர், பன்னீர், லஸ்ஸி போன்ற பால் உபபொருள்களின் விற்பனையை அதிகரிக்க சிறப்பு மொத்த விற்பனையாளர்களை நியமிக்க ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சித்தர்கள் சித்தரிக்கும் ஓவிய கண்காட்சி நிறைவு
பிரம்ம ஞானி அமரகவி சித்தேஸ்வரரின் காலப் பயணத்தை சித்தரிக்கும் வகையிலான ஓவியக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (டிச.8) நிறைவு பெற்றது.
திருமலையில் காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள் வழிபாடு
காஞ்சிபுரம் சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை திருமலையில் ஏழுமலையானை வழிபட்டார்.
வேளச்சேரி - பெருங்குடி பறக்கும் ரயில் சாலை ரூ.15 கோடியில் புனரமைப்பு
வேளச்சேரி - பெருங்குடியை இணைக்கும் பெருங்குடி பறக்கும் ரயில் சாலையை, ரூ.15 கோடி மதிப்பில் புனரமைப்பதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை 16% அதிகம்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நிகழாண்டில் இயல்பை விட 16 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.
சட்டப்பேரவை இன்று கூடுகிறது
டங்ஸ்டன் சுரங்க உரிமத்துக்கு எதிராக தனித் தீர்மானம்
சிரியாவில் அதிபர் அல்-அஸாத் ஆட்சி கவிழ்ப்பு
சிரியா தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சிக் குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைப்பற்றினர். இதையடுத்து, அதிபர் பஷார் அல்-அஸாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.
விடாமுயற்சியே வெற்றி...!
தமிழர்களின் தற்காப்புக் கலையான சிலம்பத்தில் மட்டும் தேசியப் போட்டிகளில் ஐந்து முறை தங்கப் பதக்கத்தை வென்றவர் காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரத்தைச் சேர்ந்த இளைஞர் ச.சதீஷ்குமார். “விடா முயற்சியே வெற்றிக்கு காரணம்” என்கிறார் அவர்.
இந்தியாவின் அடையாளம்..!
2024 டிசம்பர் 12-இல் நடைபெற்ற வி.ஐ.டி. மாணிக்க விழாவில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, அமைச்சர் துரை முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று பல்கலைக்கழகத்தின் பெருமைகளைப் பேசினர்.
மலைக்கோட்டை கோயிலில் கார்த்திகை தீபத்துக்கு மெகா திரி தயார்
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் கார்த்திகை தீபத்துக்காக 300 மீட்டர் நீள பிரம்மாண்ட திரி தயாரிக்கப்பட்டுள்ளது.
ரூ.42 கோடியில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, டிச. 7: தாம்பரம் முடிச்சூரில் ரூ. 42.40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சனிக்கிழமை திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மகாதீபத் திருவிழா: நாக வாகனத்தில் பவனி வந்த ஸ்ரீசந்திரசேகரர்
திருவண்ணாமலை, டிச. 7: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 4-ஆவது நாளான சனிக்கிழமை நாக வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது.
புர்கினா ஃபாசோ அரசைக் கலைத்தது ராணுவம்
ஓகடூகு, டிச. 7: மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாசோவில் பிரதமர் அபோலினேர் ஜோசிம் கலீம் டம்பேலா தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசை அந்த நாட்டு ராணுவம் கலைத்துள்ளது.
முக்கியத் துறைமுகங்களில் சரக்குப் போக்குவரத்து சரிவு
மும்பை, டிச. 7: இந்தியாவின் முக்கிய 12 துறைமுகங்களில் சரக்குப் போக்குவரத்து கடந்த நவம்பர் மாதம் 4.95 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
தென் கொரிய அதிபருக்கு எதிரான பதவிநீக்க முயற்சி தோல்வி
சியோல், டிச. 7: அவசரநிலை அறிவித்த விவகாரத்தில் தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த பதவிநீக்கத் தீர்மானம் தோல்வியடைந்தது.
சிரியா தலைநகரை சுற்றிவளைத்த கிளர்ச்சிப் படையினர்
டமாஸ்கஸ், டிச. 7: சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றி அந்நகரை சுற்றிவளைத்துள்ளதாக அந்த நாட்டின் போர் நிலவரத்தைக் கண்காணித்துவரும் அமைப்பின் தலைவரும் கிளர்ச்சிப் படை தளபதி ஒருவரும் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து 5,00,000
நியூஸிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது.
அடிலெய்ட் டெஸ்ட்: இந்தியா திணறல், ஆஸி. முன்னிலை
அடிலெய்ட், டிச. 7: இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பிங்க் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது நாளான சனிக்கிழமை ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா 128/5 ரன்களுடன் திணறி வருகிறது.