CATEGORIES
Categories
பழங்குடியின சிறுமி பாலியல் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை
சத்தீஸ்கர் நீதிமன்றம் தீர்ப்பு
தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அங்கீகாரம் திரும்பப் பெறப்படும்
பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. எச்சரிக்கை
ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றம்
வேட்புமனு ஏற்பில் குளறுபடி எதிரொலி
ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: லாபத்தில் சென்செக்ஸ் நிறைவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்துடன் நிறைவடைந்தன.
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன்
பாஜகவுக்கு ஜிதன் ராம் மாஞ்சி எச்சரிக்கை
தென் மாநிலங்களின் கலாசாரங்கள் பிரதிபலிப்பு!
இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி தனது மாளிகையில் குடியரசுத் தலைவர் அளிக்கவிருக்கும் 'அட் ஹோம்' எனப்படும் தேநீர் விருந்து வரவேற்புக்கு அழைக்கப்படுபவர்களுக்கு, இந்தியாவின் ஐந்து தென் மாநிலங்களின் கலை மற்றும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பொருள்கள் இடம் பெற்ற கைவினைப்பெட்டி அழைப்பிதழை (படம்) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கியுள்ளார்.
போரில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள்!
மோசமான விளைவுகளைப் போர் ஏற்படுத்துகிறது. அதில், ஆகக் கொடுமையான விஷயம் குழந்தைகள் பாதிக்கப்படுவதுதான்.
டிசம்பரில் சரிந்த பாமாயில் இறக்குமதி
இந்தியாவின் பாமாயில் இறக்குமதி கடந்த டிசம்பரில் வெகுவாக வீழ்ச்சியடைந்தது. விலை குறைவான சோயாபீன் எண்ணெயின் சந்தைப் பங்கு அதிகரித்ததால் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் திரும்பப் பெறப்படுமா?
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பதில்
கோலங்கள் என்றும் அழிவதில்லை!
பரபரப்பான சென்னை மயிலாப்பூர் வடக்கு வீதி; அவசரகதியில் மக்கள் இயங்கும் பகுதி. அந்த வீதி ஒரு நாள் திருவிழாக்கோலம் பூண்டது; அழகு பெற்றது.
அர்ஷ்தீப், வருண் அசத்தல்; அபிஷேக் அதிரடி
முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி
வக்ஃப் திருத்த மசோதா: ஜேபிசி கூட்டத்தை ஜன.30, 31-இல் நடத்த ஆ.ராசா வலியுறுத்தல்
வக்ஃப் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தை அவசரகதியில் ஜன. 24, 25 ஆகிய தேதிகளில் நடத்தாமல் ஜன.30, 31 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அக்குழுவின் உறுப்பினரும் திமுக எம்.பி.யுமான ஆ. ராசா வலியுறுத்தினார்.
நெல் ஈரப்பதம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 இடங்களில் மத்திய குழு ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
பிரக்ஞானந்தா தனி முன்னிலை
நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, தனி முன்னிலை பெற்றார்.
தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
நாட்டில் பொது சுகாதார சேவைகள் மேம்பாட்டுக் கான தேசிய சுகாதார இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
துருக்கி ஹோட்டல் தீவிபத்து: உயிரிழப்பு 76-ஆக உயர்வு
துருக்கி ஹோட்டல் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76-ஆக அதிகரித்துள்ளது.
அரசின் சமச்சீரான பயணத்துக்கு வணிகர்களின் ஆதரவு அவசியம்
எல்லோருக்கும், எல்லாமுமாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கூடிய தமிழக அரசின் சமச்சீரான பயணத்துக்கு வணிகர்களின் ஆதரவு மிகவும் அவசியம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.60,200-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன் கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.60,200-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கிண்டி கிங் ஆய்வக மருந்து தர மேம்பாட்டுக்கு ரூ. 12 கோடி ஒதுக்கீடு
சென்னை கிண்டி கிங் ஆய்வகத்தில் மருந்து தரக் கட்டுப்பாடு மேம்பாட்டுக்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம்: ரயில் மோதி 12 பயணிகள் உயிரிழப்பு
தீ விபத்து வதந்தியால் தண்டவாளத்தில் இறங்கியவர்கள்
இந்தியா முழு வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதில் இளைஞர்களின் பங்கு அவசியம்: ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்தியா 2047-ஆம் ஆண்டில் முழுவதும் வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதில் இளைஞர்களின் பங்கு அவசியம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
AO அரையிறுதியில் சின்னர், ஷெல்டன்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: கதிர் ஆனந்திடம் 10 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக வேலூர் தொகுதி திமுக எம்.பி. கதிர் ஆனந்திடம் அமலாக்கத் துறையினர் புதன்கிழமை 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பேராசிரியர் சாமி.தியாகராசன் (86) காலமானார்
எழுத்தாளரும், பேராசிரியருமான சாமி. தியாகராசன் (86) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானார்.
கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்த வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்த வழக்குத் தொடர்பாக சிபிஐ புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
திருச்செந்தூர் கோயில் மேம்பாட்டுப் பணி: அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு
திருச்செந்தூர் கோயில் மேம்பாட்டுப் பணிகளை அந்தக் கோயில் நிதியிலிருந்து மேற்கொள்ளத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், கோயில் அறங்காவலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
எடப்பாடி பழனிசாமி மீதான தேர்தல் வழக்கு: காவல் துறை விசாரணைக்கு தடையில்லை
உயர்நீதிமன்றம் உத்தரவு
உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்த சைஃப் அலிகான்
கொள்ளையரால் கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் பஜன்சிங் ராணாவை அழைத்து நடிகர் சைஃப் அலி கான் நன்றி தெரிவித்தார்.
சீமான் வீட்டை முற்றுகையிட முயற்சி: 750 பேர் கைது
சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற 750 பேர் கைது செய்யப்பட்டனர்.
பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்
தமிழகம் முழுவதும் நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.