CATEGORIES
Categories
பஞ்சாப்: போராட்ட களத்தில் தற்கொலைக்கு முயன்ற விவசாயி
பஞ்சாப்-ஹரியாணா இடையிலான ஷம்பு எல்லையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 55 வயது விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணியை கலைப்பது நல்லது
மக்களவைத் தேர்தலுக்காக மட்டும் எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி உருவாக்கப்பட்டிருந்தால், அதனைக் கலைத்து விடுவது நல்லது என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'இண்டி' கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கு மட்டும்தான்
தேஜஸ்வி கருத்துக்கு பிகார் காங்கிரஸ் தலைவர் ஆதரவு
மனித உரிமை பாதுகாப்பு, கருத்துச் சுதந்திரம்: இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் உறுதியேற்பு
ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமை ஆகிய பகிரப்பட்ட கொள்கைகள் மீதான உறுதிப்பாட்டை வலியுறுத்திய இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம், சமூகத்தில் கருத்துச் சுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் ஒப்புக்கொண்டது.
தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் மறுத்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் மறுத்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் மோதல்
3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
ஓய்வு அளிக்கப்பட்ட மோப்ப நாய்களை தத்தெடுக்கும் சேவை: சிஆர்பிஎஃப் அறிமுகம்
பாதுகாப்பு படையில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் மற்றும் தாக்குதல் நாய்களை பொதுமக்கள் தத்தெடுக்க அனுமதிக்கும் இணையதள சேவையை மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு தொகுதியில் மட்டுமே போட்டி: பாஜகவுக்கு கேஜரிவால் பதிலடி
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் புது தில்லி தொகுதியில் மட்டுமே போட்டியிட இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
நாங்கள் பேசுவதை நேரலையில் காட்டாதது ஏன்?
நாங்கள் பேசுவதை மட்டும் நேரலையில் காட்டாதது ஏன் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
அதிக தடுப்பணைகள் கட்டத் திட்டம்: நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்
நிகழாண்டில் அதிக தடுப்பணைகளைக் கட்ட திட்டமிட்டுள்ளதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
2,512 வீட்டு வசதி வாரிய வீடுகள் இதுவரை விற்பனை - அமைச்சர் எஸ்.முத்துசாமி தகவல்
சென்னை, ஜன. 9: தமிழகத்தில் விற்பனை ஆகாமல் இருந்த வீடுகளில் இதுவரை 2,512 வீடுகள் விற்கப்பட்டுள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தெரிவித்தார்.
அவையில் இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள்: அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
பேரவை நடவடிக்கையின்போது அவையில் அதிகாரிகள் இல்லாத நிலையில், அவை முன்னவர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்தார்.
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ஃபென்ஜால் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருவதாகவும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ரேபிஸ் அச்சுறுத்தலில் அரசு மனநல காப்பகம்!
அரசு மன நல காப்பக வளாகத்துக்குள் தெரு நாய்கள் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு மட்டும் அங்கு 25-க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யுஜிசி வரைவு விதிக்கு எதிராக தீர்மானம்: பேரவையில் பாஜக வெளிநடப்பு
துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வின் வரைவு விதிக்கு எதிராக பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தது.
முதுகெலும்பு தசை சிதைவு நோய்க்கான ஊசி ரூ.18 கோடியா?
முதுகெலும்பு தசை சிதைவு நோய்க்கு ரூ. 18 கோடியில் ஊசி எதுவும் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இனியும் தாமதம் தகாது!
ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தகுதித்தேர்வை நடத்தும் முக்கியப் பொறுப்பை தற்போது அரசு வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக உதவிப் பேராசிரியர்களை போட்டித் தேர்வின் மூலம் தேர்வு செய்யும் அடுத்த கடமையும் வாரியத்துக்கு உள்ளது.
பாம்புக்கடி அறிவிக்கக் கூடிய ஒரு நோய்!
இந்தியாவில் ஏற்கெனவே எய்ட்ஸ், காலரா, மலேரியா, டெங்கு, போலியோ உள்ளிட்ட பதினேழுக்கும் மேற்பட்ட நோய்கள், மக்களை அதிக அளவில் பாதித்து உயிரிழப்புகளை ஏற்படுத்துகிற ‘அறிவிக்கக் கூடிய நோய்களாக’ வகைப்படுத்தப்பட்டு, மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.
இல.கோபாலன் உடல் தகனம்
நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசனின் மூத்த சகோதரர் இல.கோபாலன் (82) வயதுமூப்பு காரணமாக புதன்கிழமை காலமான நிலையில், இறுதிச் சடங்குகளுக்கு பிறகு அவரது உடல் கிண்டி தொழிற்பேட்டை மின்மயானத்தில் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்லும்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க இடைக்காலத் தடை
அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது, இரட்டை இலை சின்னம் ஆகிய விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று தவெக மாவட்ட செயலர்கள் கூட்டம்
சென்னை அருகே பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 10) நடைபெறவுள்ளது.
இன்று ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை ஒருங்கிணைக்க திட்டம்
ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை (ஜன.10) தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
காரைக்கால், நாகை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு
காரைக்கால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை சிறைபிடிக்கப்பட்டனர்.
கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுகள் ஏற்றி வந்த 5 வாகனங்கள் பறிமுதல்: 9 பேர் கைது
கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுகள் ஏற்றி வந்த 5 வாகனங்களை தமிழக எல்லையில் போலீஸார் பறிமுதல் செய்து, 9 பேரை கைது செய்தனர்.
அண்ணா பல்கலை. சம்பவ வழக்கு: தமிழக அரசு மேல் முறையீடு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மட்டும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொங்கல்: ஆம்னி பேருந்துகளில் உச்சம் தொட்ட பயணச்சீட்டு கட்டணம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 4,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பெண்களுக்கு எதிராக குற்றமிழைத்த யாரும் தப்பிக்க முடியாது
பெண்களுக்கு எதிராக குற்றங்களை இழைத்த யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை அருகே பேருந்து - வேன் மோதல்: 4 பேர் உயிரிழப்பு; 37 பேர் பலத்த காயம்
ராணிப்பேட்டை அருகே கர்நாடக மாநில பக்தர்கள் பேருந்தும் காய்கறி வேனும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்; மேலும், 37 பேர் பலத்த காயமடைந்தனர்.
பொங்கல்: நாளைமுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டநெரிசலைத் தவிர்க்கும் நோக்கில் சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரைக்கு சனிக்கிழமை (ஜன. 11) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.