CATEGORIES
Categories
"நினைப்பது நகைப்புக்குரியது"
நாட்டுக்காக நான் செய்த சில விடயங்களை மறந்தாலும் நாட்டு மக்கள் அவற்றை நினைவு கூருவார்கள் என நினைப்பது நகைப்புக்குரியது என முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
குளத்துக்கு நீராடச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு
இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில், ஞாயிற்றுக்கிழமை (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மிளகாயில் ஐஸ்கிரீம்
இந்நாட்டில் முதன்முறையாக மிளகாயில் இருந்து ஐஸ்கிரீமை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மிதந்த போத்தலை திறந்து அருந்திய ஐவர் பலி
சர்வதேச கடலில் ஆபத்தான நிலையில் இருந்த 6 மீனவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய மீனவரை காப்பாற்ற கடற்படை வைத்தியர் உட்பட கடற்படை குழு முயற்சித்து வருவதாக கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் தொடர்பில் மக்களிடம் பெரும் சந்தேகம்
\"செப்டெம்பர் 16 முதல் ஒக்டோபர் 16 வரை ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் பொதுமக்களுக்கு நியாயமான சந்தேகம் உள்ளது\" என்று பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இரு தினங்கள் விசேட அமர்வு
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை நிறைவேற்றுவதற்காக ஜூலை 2, 3ஆம் திகதிகளில் விசேட பாராளுமன்ற அமர்வை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரு வாரங்களில் 12 பேர் இணைவர்
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அரசாங்கத்துக்குச் சென்றவர்களே இவ்வாறு இணையவுள்ளனர்
எரிபொருள் விலையில் திருத்தம்
எரிபொருள் விலை ஞாயிற்றுக்கிழமை திருத்தம் (30) இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தாமரை மொட்டில் தனி வேட்பாளர்
நாமலை அழைத்து வர முற்படும் போது, அவர் இன்னும் சோம்பேறியாக இருப்பதாகக் கூறுகிறார்
அ.தி.மு.க. போராட்டத்துக்கு பிரேமலதா ஆதரவு
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) சார்பில் கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி மரணமடைந்தமை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) அரசைக் கண்டித்து சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை(27) நடந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்கா தகுதி பெற்றுள்ளது.
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா குறித்து கலந்துரையாடல்
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் வியாழக்கிழமை (27) காலை 11 மணியளவில் மடுத்திருத்தல கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மலசலக்கூடத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு
நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பொது மலசலக்கூடத்தில் இருந்து இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
“வேலைக்கு செல்லுங்கள்”
அனைத்து பாடசாலை மாணவர்களின் நலன்களையும் கருத்திற்கொண்டு வெள்ளிக்கிழமை(28) பணிக்கு சமூகமளிக்குமாறு, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் பதில் கல்வி அமைச்சரும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனாவில் மஹிந்த
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வியாழக்கிழமை (27) சீனாவுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனப் பிரதமர் லீ கியாங், வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
மலையக சமூக குடும்பங்களை பிரஜைகளாக்கும் கொள்கை தயார்
பெருந்தோட்ட பிரதேசங்களில், நவீன அடிமைத்துவ அம்சங்களுக்கு மத்தியில், மலையக சமூக குடும்பங்கள் வாழ்கின்றன.
மாணவனின் வயிற்றை கிழித்த இரண்டடி தடி மீட்பு
பனை மரத்திலிருந்து கீழே தவறிவிழுந்த போது, பாடசாலை மாணவனின் வயிற்றில் குத்திய இரண்டடி நீளமுள்ள தடி மீட்கப்பட்டுள்ள சம்பவமொன்று கல்முனையில் இடம்பெற்றுள்ளது.
“வார இறுதி விடுமுறையில் வேலை செய்யோம்"
நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் புதன்கிழமை (26) ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு, மூன்று நாட்களுக்குத் தொடரும் என அறிவித்துள்ளனர்.
80 இலட்சம் ரூபாய் நகை, பணம் அடகுக் கடையில் மோசடி: முகாமையாளருக்கு சிறை
தனியார் அடகுக் கடையொன்றில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளில் சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள், பணம் உள்ளிட்டவற்றை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் அந்த அடகு நிலையத்தில் மேலாளராகக் கடமையாற்றிய நபர், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
இலங்கைக்கான நீடித்த நிதி வசதி திட்டத்தினை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்த நிலையில் இலங்கையின் இருதரப்பு கடன் வழங்குநர்கள் மத்தியில் இலங்கையின் கடன்களை மறுசீரமைப்பதற்கான பேச்சுகளை முன்னெடுக்கும் நோக்குடன் 2023 ஏப்ரல் 13ஆம் திகதி உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் சபையானது (occ) ஸ்தாபிக்கப்பட்டது.
"கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டில் பிரச்சினைகள் உள்ளன”
சர்வதேச நாணய நிதிய (IMF) திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து பல விடயங்கள் புதன்கிழமை (26) வெளிப்படுத்தப் பட்டன.
ஜனாதிபதி ரணில் கண்டியில் வழிபாடு
கண்டிக்கு, வியாழக்கிழமை (27) விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
“அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படாது”
ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொவிட் தொற்றுநோய் சூழ்நிலையால் எங்களுக்கு ஏற்பட்ட வெளிநாட்டு நிதி பிரச்சினைகளால் நாங்கள் எதிர்கொண்ட சூழ்நிலையை நினைவில் கொள்ள வேண்டும்
ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தெரிவாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனபாதிபதி தேர்தல்: ட்ரம்ப் - பைடன் நேருக்கு நேர் விவாதம்
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி ஜனபாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.
உ மலர்ச்சாலை உரிமையாளர் அமரர் ஊர்தியில் படுகொலை
மலர்ச்சாலை உரிமையாளர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
'சர்வதேச பிரிந்த ஆத்மாக்கள் தினம்'
'மனிதனுக்கு சேவை செய்வதே மனிதனின் இறுதிக் கடமையாகும்' என்ற தொனிப் பொருளுக்கு இணங்க, இரவு, பகல் பார்க்காது எந்த சந்தர்ப்பத்திலும் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் செய்திகளை சேகரித்து மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஊடக நிறுவனங்களின் பணியாற்றும் மற்றும் பொறுப்புக்களில் ஈடுபட்டுள்ள சகல ஊடகவியலாளர்களுக்கும் விஷேட அடையாள அட்டைகள் 'சர்வதேச பிரிந்த ஆத்மாக்கள் தினம்' கொண்டாடப்பட்ட வேளையில் வழங்கப்பட்டன.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்
நிவிதிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதகட பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்திற்குள்ளாகி காயமடைந்துள்ளார்.
அதிபர்கள், ஆசிரியர்களின்: சுகயீனத்தால் பாடசாலைகள் முழுமையாக முடங்கின
கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
மதுபானசாலைக்கு கடும் எதிர்ப்பு: 15 பேருக்கு விளக்கமறியல்
மூதூர்-இருதயபுர மதுபானசாலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, செவ்வாய்க்கிழமை(25) கைது செய்யப்பட்ட 15 பேரும் நீதிமன்ற உத்திரவின் பிரகாரம், ஜூலை 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.