CATEGORIES
Categories
தேசிய அரசாங்கத்தை புறக்கணிக்க முடிவு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு முயற்சிக்கும் நிலையில், அதற்கு ஆதரவளிக்காதிருக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.
“3 மாதங்களில் தீர்த்து வைக்கவும்”
சம்பந்தனின் ஆயுட் காலத்திலேயே தமிழ்த் தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று இங்கு ஜனாதிபதி கூறினார்.
காஸ் விலை குறைப்பு
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை செவ்வாய்க்கிழமை(02) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
உடைந்த பல்லால் அண்ணனை அடையாளம் கண்ட தங்கை
உத்தரப்பிரதேசத்தில் 18 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் பயணத்தில் காணாமல் போன தனது அண்ணனை, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் தங்கை ஒருவர் அடையாளம் கண்டுள்ளார். அதுவும் உடைந்த பல்லை வைத்து கண்டுபிடித்துள்ளார்.
மாகாண மட்ட சதுரங்கப் போட்டிக்கு கற்பிட்டி அல் அக்ஸா மாணவர் 8 பேர் தெரிவு
இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கம் கல்வி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு இடையிலான புத்தளம் வலய சதுரங்கப் போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் எட்டு மாணவ, மாணவியர் வெற்றி பெற்று மாகாண மட்ட போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளனர்.
இந்திய இழுவை படகுகளுக்கு எதிர்ப்பு
எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்யக் கோரி யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்புகளால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சுவிட்ஸர்லாந்தில் வெள்ளம், மண்சரிவு: நால்வர் உயிரிழப்பு
சுவிட்ஸர்லாந்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் நால்வர் உயிரிழந்ததுடன், இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாண வூசூ போட்டிகள் நடத்தாமை தொடர்பாக சு வீரர்கள், வூசு சங்கத்தினர் அதிருப்தி
வடக்கு மாகாண வூசூ (WUSHU) போட்டிகள் நடத்தாமை திட்டமிட்ட பக்கச்சார்பான நடவடிக்கை என பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண வூசூ வீரர்கள் மற்றும் மாவட்ட வூசூ சங்கத்தினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
யூரோ: காலிறுதியில் இங்கிலாந்து-ஸ்பெய்ன்
ஜே ர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து, ஸ்பெய்ன் ஆகியன தகுதி பெற்றுள்ளன.
பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தலால் வெடித்த வன்முறை
பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து அதனை எதிர்க்கும் தரப்பினரால் தலைநகர் பெரிஸில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், வர்த்தக நிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டமை மக்கள் மத்தியில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.
இரா.சம்பந்தன் மறைவுக்கு ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ்,அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தன் விட்டுச் செல்லும் இடைவெளி
தமிழர் அரசியலில் பல்வேறு விமர்சனங்களுக்குரியவராக பலராலும் பேசப்பட்டாலும், விமர்சிக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவு விரைவில் திரப்பப்பட இடைவெளியையே ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக மீனவர்கள் 25 பேர் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 தமிழக கடற்றொழிலாளர்கள் திங்கட்கிழமை (01) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய விவாதம் ஒத்திவைப்பு: ஜனாதிபதி விசேட உரையாற்றுவார்
கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் கடன் வழங்கும் நாடுகளுடன் இலங்கை பாடுபட்ட உடன்படிக்கை மீதான விவாதம் பாராளுமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (02) ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வெற்றிடத்துக்கு சண்முகம் குகதாசன்
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த இரா.சம்பந்தனின் வெற்றிடத்துக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கிலுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் 1,000 மில், ரூபாய் செலவில் அபிவிருத்தி
பாணந்துறை முதல் கிரிந்த வரையுள்ள 18 கடற்றொழில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்குக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்காக அரசாங்கத்திடமிருந்து 1,000 மில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்
“மக்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்”
நாடு வங்குரோத்தடைந்துள்ள நேரத்தில், வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கான செயல்பாட்டில், நாட்டில் கட்டமைப்பு ரீதியாக எதிர்நோக்கி வரும் அனைத்து சிக்கல்களையும் சவால்களையும் கண்டறிந்து தீர்வு காண வேண்டும்.
5.07 சதவீதத்தால் கட்டணம் குறைப்பு
பஸ் கட்டணம் 5.07 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு திங்கட்கிழமை (01) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டள்ளது.
ஹிருணிக்காவின் மேன் முறையீடுக்கு திகதி குறிப்பு
முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு (மேன்முறையீட்டு நிலுவையில் உள்ளது) கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஜூலை 4ஆம் திகதிக்கு திங்கட்கிழமை (01) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விலை மாறவில்லை
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஜூன் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.
தமிழ் அரசியலின் முதுசம் சரிந்தது
பாராளுமன்றத்தில் புதனன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை இறுதி அஞ்லிசக்காக பூதவுடல் வைக்கப்படும் அவரது சொந்த ஊரான திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஞாயிறன்று இறுதி கிரியைகள் நடத்தப்படும்
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள்
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆற்றுப்படுகையில் நிறுத்தப்பட்ட ஏராளமான கார்கள் அடித்து செல்லப்பட்டன.
ஈரான் ஜனாதிபதித் தேர்தல்: 2ஆம் கட்ட வாக்குப்பதிவு
ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கீதையால் பெருமை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பெருமிதம்
பகவத் கீதையை வைத்து, பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றதில் பெருமை அடைகிறேன் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பெருமிதத்துடன் கூறினார்.
இருபதுக்கு-20 உலகக் கிண்ணம்: இந்தியா சம்பியன்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியனானது.
புத்தளம், நோர்வூட், கரடியனாறு விபத்துகளில் இருவர் பலி; இருவர் காயம்
புத்தளம், நோர்வூட் மற்றும் கரடியனாறு ஆகிய பிரதேசங்களில், சனி (29) ஞாயிறு (30) கிழமைகளில் ஏற்பட்ட மூன்று விபத்துகளில், இருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்துள்ளனர் என அந்தந்த பிரதேசங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“முகநூலின் மூலம் அனுரவுக்கு ஜனாதிபதியாக முடியாது"
நாட்டின் ஜனாதிபதியாக இன்னும் மூன்று மாதங்களில் அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டால் ஆசிரியர்களை வீதிக்கு இறக்காமல் ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்த முடியும்.
"நாளாந்த வேதனத்தை அதிகரிக்க முன்வரவும்”
பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கப்பாட்டின் அடிப்படையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை அதிகரிக்க முன்வர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நால்வர் தாவுவர்?
பாராளுமன்றத்தில் எதிர்வரும் 2ஆம் திகதி ஜனாதிபதி உரையாற்றும் போது, எதிர்க்கட்சியின் நான்கு உறுப்பினர்களில் இருவர் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரொபர்ட் கப்ரோத் வருகிறார்
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் (Robert Kaproth) இலங்கை வரவுள்ளார்.